two killed in three wheeler crash | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் உயிரிழப்பு..!

  • Jul 22, 2026 - 10:05 AM
  • 0 Comments

நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சியிலிருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அந்த முச்சக்கர வண்டியில் இரு முதியவர்களும் இரண்டு சிறுவர்களும் பயணித்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த இரு சிறுவர்களும் தற்போது பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

protest begins in chemmani | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணியில் ஆரம்பமாகியது போராட்டம்..!

  • Jul 22, 2026 - 10:02 AM
  • 0 Comments

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது. செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடுவதற்காக , ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழு வருகை தந்த நிலையில் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போரட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், […]

gunfire reported in devundara gandara | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு..!

  • Jul 22, 2026 - 09:57 AM
  • 0 Comments

தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (22.07.2026) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்துப்பாக்கி ஒன்றினால் இத்துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி, தேவேந்திரமுனை பகுதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீட்டின் மீதே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

no change in central bank policy rates | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களில் மாற்றமில்லை..!

  • Jul 22, 2026 - 09:54 AM
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 8.75% என்ற நிலையிலேயே பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்காலக் கணிப்புகளைக் கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ள பதற்ற நிலைமைகள் காரணமாக, உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்நிலைமை உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்மறையான தாக்கங்களை […]

eu delegation meets tamil parties in jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் தமிழ் கட்சிகளை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு..!

  • Jul 22, 2026 - 09:49 AM
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணத்தை வந்தடைந்த குழுவினர் , யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர். […]

sri lanka weather today 15 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • Jul 22, 2026 - 09:45 AM
  • 0 Comments

22.07.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 […]

kattuvan fire tragedy 5 killed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுவான தீ விபத்து 5பேரின் உயிரைப் பறித்த முழுமையான விபரம்..!

  • Jul 22, 2026 - 09:42 AM
  • 0 Comments

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டத்தைக் கூட தயாரிக்கவில்லை எனவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்பதை மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் PVC உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் தீப்பற்றும்போது மனித […]

world banks new dairy farmers scheme | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பால் பண்ணையாளர்களுக்கு உலக வங்கியின் புதிய திட்டம்..!

  • Jul 22, 2026 - 09:30 AM
  • 0 Comments

‘டித்வா’ அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் விசேட அவசர நிவாரணத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விலங்குகளுக்காக அரசாங்கத்தினால் ஏற்கனவே வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாக இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அவசர மீட்புத் திட்டம் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படுவதாகவும், திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து ஆரம்பக் […]

mayilvaganam swamigal 41st guru pooja | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மயில்வாகனம் சுவாமிகளின் 41 ஆவது குரு பூசை..!

  • Jul 21, 2026 - 05:03 PM
  • 0 Comments

ஶ்ரீமத் தவத்திரு முத்துக்குமாரு மயில்வாகனம் சுவாமிகளின் 41 ஆவது குருபூசை வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிராமத்தில் அதன் முதல்வர் சாதனை தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இன்னு செவ்வாய்க்கிழமை(21.07.2026)காலை 11:00 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது. இதில் நினைவுரைகளை கலாநிதி துரை கணேசமூர்த்தி, ஓய்வு பெற்ற கிராம அலுவலர், உட்பட பலரும் நிகழ்த்தினர். முன்னதாக முத்துக்குமாரு மயில்வாகனம் நினைவாக செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றதனை தொடர்ந்தே சந்நிதியான் ஆச்சிரமத்தில் நினைவுரைக்கள் […]

tn fishermen destroy fishing nets | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்..!

  • Jul 21, 2026 - 04:57 PM
  • 0 Comments

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக , நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைமடி படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, மண்டைதீவு, […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊