19 year old arrested with ice drugs | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞர் கைது..!

  • Oct 7, 2026 - 09:46 AM
  • 0 Comments

தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாலிபுல்ல தோட்டம் பகுதியில் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (06.10.2026) இரவு இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 19 வயதுடைய கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவராவார். கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

thunderstorms in sri lanka this afternoon | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று பிற்பகலில் இடியுடன் கூடிய மழை..!

  • Oct 7, 2026 - 09:44 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திணைக்களம் இன்று (07.10.2026) அதிகாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. […]

young writers 2026 national student creative writing competition | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

“இளம் எழுத்துகள் 2026” நாடளாவிய மாணவர் படைப்பாக்கப் போட்டி..!

  • Oct 6, 2026 - 02:34 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம்: சிறகுகள் அமையத்தின் பத்து ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம், கற்பனைத்திறன், படைப்பாற்றல், எழுத்தாற்றல் மற்றும் ஆய்வுச் சிந்தனையை வளர்க்கும் நோக்கில் “வாசிப்பு மாதம் 2026 – இளம் எழுத்துகள் 2026” எனும் நாடளாவிய மாணவர் படைப்பாக்கப் போட்டி முன்னெடுக்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட சிறகுகள் அமையம், கல்வி, வாசிப்பு, இளைஞர் தலைமைத்துவம், சமூகப் பங்கேற்பு, சமூக சேவை, சுற்றுச்சூழல் மற்றும் ஆவணப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கடந்த பத்து ஆண்டுகளாக […]

vattu hindu college founder memorial day and awards ceremony | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வட்டு இந்துக் கல்லூரியின் நிறுவனர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும்..!

  • Oct 6, 2026 - 02:23 PM
  • 0 Comments

வட்டு இந்துக் கல்லூரியின் நிறுவனர் நினைவு நாளும் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பரிசளிப்பு விழாவும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(06.10.2026) கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கல்வி, விளையாட்டு, இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கியதுடன், தேசிய மட்டத்தில் சிறந்து விளங்கிய மாணவர்களையும் சிறப்பாகக் கௌரவித்தார். அத்துடன் நிகழ்வின் முக்கிய அம்சமாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சிறப்பு […]

karaitivu vipulananda montessori childrens day at batticaloa library | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டு.மாநகர பொது நூலகத்தில் காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரியின் சிறுவர் தின விழா..!

  • Oct 6, 2026 - 12:10 PM
  • 0 Comments

காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி பாடசாலை மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் மேயர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நேற்று முன்தினம் (04.10.2026) மட்டக்களப்பு பொது நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. காரைதீவில் இருந்து இதற்கென விபுலானந்தா மொன்டிசோரி மாணவர்கள் , பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா ஒழுங்கமைப்பில் விசேட பேரூந்தில் மட்.பொது நூலகத்திற்கு சென்றிருந்தார்கள். அங்கு அவர்களுக்கு விசேட வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினரும், நூலகக் குழுத் தலைவருமான […]

health minister nalinda praises sri sathya sai sanjeevani hospital | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சுகாதார அமைச்சர் நளிந்த, ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலைக்கு விசேட பாராட்டு..!

  • Oct 6, 2026 - 12:00 PM
  • 0 Comments

செயலாளர் அனில் ஜாசிங்க நேரில் சென்று கையளிப்பு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையின் தன்னலமற்ற இலவச இதய சிகிச்சைகள் பணிக்காக விசேட பாராட்டு விருதினை வழங்கியுள்ளார். அமைச்சரின் விசேட பாராட்டு விருதினை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க நேற்று முன்தினம் மட்டக்களப்பு கிரான்குளத்திற்கு நேரடியாக சென்று கையளித்தார். மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையில் மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வரும் இதயநோய் சிகிச்சைச் […]

university of jaffna 41st general convocation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா..!

  • Oct 6, 2026 - 11:50 AM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் தலைமையில் வெகு கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையான மூன்று நாள்களும், ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பட்டம் பெற்ற பட்டதாரிகள், பல்கலைக்கழக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், நூலகர், நிதியாளர் மற்றும் பதிவாளர் ஆகியோர் முதலில் அணிவகுத்துச் செல்ல, தவில் நாதஸ்வர மங்கள வாத்தியங்கள் […]

saranas wife remanded further | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சரணவின் மனைவி தொடர்ந்தும் விளக்கமறியலில்..!

  • Oct 6, 2026 - 11:42 AM
  • 0 Comments

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் (06.10.2026) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சரண குணவர்தனவின் தண்டனையைக் குறைத்துக் கொள்வதற்காக மேல் நீதிமன்ற நீதிபதியொருவருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட போதே, அவர் கைது செய்யப்பட்டிருந்தார். […]

sainthamaruthu jummah mosque new administration elected | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு..!

  • Oct 6, 2026 - 11:15 AM
  • 0 Comments

தலைவராக முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் நியமனம் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் திங்கட்கிழமை (05.10.2026) முறைப்படி இடம்பெற்றன. இதன்படி, புதிய நிர்வாக சபையின் தலைவராக முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், பின்வரும் சான்றோர்கள் புதிய நிர்வாக சபை நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்: பிரதித் தலைவர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் […]

jaffna woman murder forensic police investigation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில். பெண் படுகொலை – தடயவியல் பொலிஸார் விசாரணை..!

  • Oct 6, 2026 - 11:12 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பின்னர், அப்பெண்ணின் தாயையும் கத்தியால் வெட்டி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைத்த இளைஞன் வீட்டில் இருந்த ஒரு பிள்ளையின் தாயான பெண் மீது சரமாரியாக கத்தியால், வெட்டியதுடன் , பெண்ணின் தலைமுடிகளையும் கத்தியால் அறுத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் அதனை தொடர்ந்து […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊