urgent warning heavy flooding at ella waterfall | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அவசர எச்சரிக்கை எல்ல நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு..!

  • Sep 24, 2026 - 10:24 AM
  • 0 Comments

மலையகப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், எல்ல நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து திடீரென அதிகரித்து, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சியில் இருந்து சீறிப்பாயும் வெள்ளநீர் அருகிலுள்ள பிரதான வீதியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வருவதால், அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

sajith led sjb protests 22nd amendment today | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்டம்..!

  • Sep 24, 2026 - 10:14 AM
  • 0 Comments

“ஜனநாயகத்தைச் சூறையாடும் 22 வேண்டாம்” எனும் கருப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்பும் இன்று (24.09.2026) முற்பகல் நடைபெறவுள்ளது. பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் முற்பகல் 09.00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வாதிகாரப் பயணத்திற்கு வித்திடும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்பும் நடத்தப்படுவதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் […]

colombo housing complex fire kills one 20 gas cylinders recovered | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி..! வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு.

  • Sep 24, 2026 - 10:08 AM
  • 0 Comments

கொழும்பில் மொரட்டுவை சோய்சாபுர அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் சி பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மற்றும் மொரட்டுவை மாநகர சபைகளுக்குச் சொந்தமான 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் குறித்த வீட்டின் உரிமையாளரான 84 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட மூவரும் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 15 வயதுடைய […]

national week declared for world childrens day | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்..!

  • Sep 24, 2026 - 09:34 AM
  • 0 Comments

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தேசிய வாரம் ஒன்றை பிரகடனப்படுத்தியுள்ளது. நாளை முதல் (25.09.2026) முதல் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், “மனதில் வலிமை – சிறுவர்களின் வளம்” எனும் கருப்பொருளின் கீழ் இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

king nilwala rivers flood warning | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிங், நில்வலா கங்கைகளை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!.

  • Sep 24, 2026 - 09:32 AM
  • 0 Comments

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டியுள்ள பல பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு சிறு வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (24.09.2026) அதிகாலை 2.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு நாளை (25.09.2026) அதிகாலை 2.30 மணி வரை செல்லுபடியாகும். தற்போது கிங் கங்கை படுகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவில் பலத்த மழை பெய்துள்ளதுடன், தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இம்மழை நிலைமை மற்றும் […]

heavy rain expected in several parts of sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு..!

  • Sep 24, 2026 - 09:29 AM
  • 0 Comments

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகள் ஊடாக கரையை கடந்து வருகின்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு இல்லை என்றபோதிலும், அமைப்பை நோக்கி வீசும் காற்று ஓட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போதைய மழை நிலைமை மேலும் தொடரும் […]

signatures collected for anojans release handed over to his parents | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக பெற்ற மக்களின் கையெழுத்துகள் பெற்றோரிடம் கையளிப்பு !

  • Sep 23, 2026 - 12:58 PM
  • 0 Comments

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி காரைதீவில் பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய பத்திரங்கள் நேற்று இரவு அனோஜனின் பெற்றாரிடம் கையளிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு சாதாரண தரப் பிரிவு மற்றும் 2004 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு (JALU) கழக நண்பர்கள் ஒன்றிணைந்து இந்த கையெழுத்து வேட்டையை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது மக்கள் பிரதிநிதிகள் ஆலய பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், நண்பர்கள், ஊடகவியலாளர்கள், உறவினர்கள் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி, அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி […]

university student killed after clothing gets caught in motorcycle wheel | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆடை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்குண்டு பல்கலைக்கழக மாணவி பலி..!

  • Sep 23, 2026 - 10:59 AM
  • 0 Comments

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22.09.2026) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 வயதுடைய திருமணமான மாணவி உயிரிழந்துள்ளார். நிந்தவூர் 9 ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார். தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று, பல்கலைக்கழக இறுதி ஆண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இச் சோக […]

mp sritharan holds discussion with farmers on the rehabilitation of kachchai tank | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கச்சாய்க் குளத்தை புனரமைப்பது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி..!

  • Sep 23, 2026 - 10:13 AM
  • 0 Comments

அதிகரித்த வெப்பம் காரணமாகக் கச்சாய்க் குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ளதால், அப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் குளத்தை நேரில் சென்று பார்வையிட்டார். ​சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் கச்சாய்க் குளத்தில், இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், குளத்தைத் தூர்வாரி ஆழப்படுத்துவதன் மூலம் நீர்க் கொள்ளளவை அதிகரித்து, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் […]

meeting between the prime minister and the imf delegation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு..!

  • Sep 23, 2026 - 10:07 AM
  • 0 Comments

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் எவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான பிரதிநிதிகள் குழு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (22) பாராளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியமைப்பின் கீழ் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எட்டப்பட்ட முடிவுகள் தொடர்பான ஏழாவது மதிப்பாய்வு குறித்து இதன்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து அடைந்துள்ள முன்னேற்றம் குறித்துக் குறிப்பிட்ட […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊