clemency petition for anojan submitted to the president through northern province governor | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அனோஜனுக்கான கருணை மனு – வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு..!

  • Sep 23, 2026 - 09:46 AM
  • 0 Comments

சவூதி அரேபியாவில் சாவுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தேசிய மகா சபை – வடக்கு மாகாண ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண ஒன்றியம் சார்பில் இக்கோரிக்கை மனு, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. […]

jaffna measures to regulate tube well construction | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில்.குழாய்க் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை ஒழுங்குமுறைபடுத்த நடவடிக்கை..!

  • Sep 23, 2026 - 09:43 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில்,குழாய்க் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை முறையான ஒழுங்குமுறையின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற ஆரம்பக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் குழாய்க் கிணறுகள் அமைப்பதை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. குடாநாட்டில் கண்காணிப்புக்கு உட்படாத வகையில் குழாய்க் கிணறுகள் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்வளத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இதனை […]

two tamil women abducted and killed navy officers arrested after 18 years | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கடத்தி கொல்லப்பட்ட இரு பெண்கள் ; 18 வருடங்களின் பின்னர் சிக்கிய கடற்படை அதிகாரிகள்..!

  • Sep 23, 2026 - 09:23 AM
  • 0 Comments

18 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையில் இரண்டு தமிழ் பெண்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொள்ளை விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், அளுத்வத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் மற்றும் ஹப்புத்தளை, தொடருந்து நிலைய வீதியில் வசித்து வந்த மற்றுமொரு ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் ஆவார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் […]

illegal assets worth over rs 475 million frozen | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

475 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான சட்டவிரோதமாக சொத்துக்கள் முடக்கம்..!

  • Sep 23, 2026 - 09:21 AM
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 475 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய பல சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. பதவிய பராக்கிரமபுர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்களை ஈட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டை பொலிஸ் மா அதிபர், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்கள் […]

sri lanka weather forecast today 5 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

  • Sep 23, 2026 - 09:19 AM
  • 0 Comments

இலங்கைக்கு வடகிழக்கே வடமேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு இல்லாவிட்டாலும், அந்த அமைப்புக்கு வீசும் காற்று சுழற்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய […]

jaffna student honoured for national top rank | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் தேசிய ரீதியில் முதலிடத்தைப்பெற்ற மாணவன் கெளரவிக்கப்பட்டார்..!

  • Sep 3, 2026 - 01:20 PM
  • 0 Comments

நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 188 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த யாழ்ப்பாண மாணவன் சு. சபின் கெளரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான சு. சபின், அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடத்தைப் பெற்றுள்ளார் தமிழ் மொழி மூலம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணத்தின் கல்வித் துறைக்கு புதிய பெருமை […]

hizbullah mp reviews slmc delegates conference preparations | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து ஹிஸ்புல்லாஹ் எம்.பி. ஆராய்வு..!

  • Sep 3, 2026 - 12:23 PM
  • 0 Comments

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்துடன் இணைந்ததாக, கட்சியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகளை ஆராயும் வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நேற்று (02.09.2026) மண்டபத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது, காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்களுடன் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் […]

48 karaithivu students pass scholarship exam | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காரைதீவு கோட்டத்தில் 48 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி..!

  • Sep 3, 2026 - 11:17 AM
  • 0 Comments

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவு கோட்டத்தில் 48 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக காரைதீவு கோட்டக்கல்வி பணிப்பாளரும்,பிரதி கல்விப் பணிப்பாளருமான ஆ. சஞ்சீவன் தெரிவித்தார் காரைதீவில் 33 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.அந்த வகையில், காரைதீவு இராமகிருஷ்ண பெண்கள் பாடசாலை – 17 மாணவர்கள், இராமகிருஷ்ண ஆண்கள் பாடசாலை – 07 மாணவர்கள், சண்முகா மகா வித்தியாலயம் – 03 மாணவர்கள், விஷ்ணு வித்தியாலயம் – 03 மாணவர்கள், விக்கினேஸ்வரா வித்தியாலயம் – 02 […]

arundika fernando at cid | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தில்..!

  • Sep 3, 2026 - 10:44 AM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும், அண்மையில் டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அருந்திக பெர்னாண்டோவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் இதன்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

sri lanka faces coal shortage | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் நிலக்கரி பற்றாக்குறை..! வலுசக்தி அமைச்சரின் அறிவிப்பு

  • Sep 3, 2026 - 10:42 AM
  • 0 Comments

நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைக்கப்பட்ட போதிலும், போதுமான அளவு நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகத்திற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நிலக்கரி இருப்பு குறைவடைந்துள்ளதையடுத்து நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். இரண்டு நிலக்கரி கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதுடன், அவற்றில் முதலாவது கப்பல் நாளை (04) வந்தடையவுள்ளது. மற்றைய கப்பல் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊