vavuniya accident death | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து: வயோதிப பெண் பலி..!

  • Apr 23, 2026 - 12:14 PM
  • 0 Comments

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று(23.04.2026) இடம்பெற்ற புகையிரத விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து திருநாள்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கொழும்பு – யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த சாரதி வவுனியா பொதுவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2475356059565273

ethnic politics | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கிலும், தெற்கிலும் உள்ள சில குழுக்கள் இனவாதம் பேசி அரசியல் நடத்துகின்றன..!

  • Apr 23, 2026 - 10:44 AM
  • 0 Comments

கடந்த கால ஆட்சியாளர்கள் யாழ்ப்பாணத்தை கைவிட்டிருந்தனர். ஆனால் எமது ஆட்சி அவ்வாறு இல்லை. யாழ்ப்பாணம் மற்றும் தீவக பகுதிகளுக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் நேற்றைய தினம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவ்வாறு […]

tn election voting | Pathivu News இந்தியா செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!

  • Apr 23, 2026 - 09:40 AM
  • 0 Comments

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமாகப் பொதுத்தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்தலில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், […]

sl weather today | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • Apr 23, 2026 - 09:33 AM
  • 0 Comments

23.04.2026 நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் […]

pillayan easter allegations | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குற்றச்சாட்டுகள் பிள்ளையான் மீது ஞானசார தேரர் சந்தேகம்..!

  • Apr 21, 2026 - 04:52 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான விசாரணைகள் மற்றும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விதம் குறித்து கலகொட அத்தே ஞானசார தேரர் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். பிள்ளையான் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்து தாக்குதல் தொடர்பான மிக முக்கியமான தகவல்கள் கிடைக்கப்பெற்று வருவதாக ஜனாதிபதியும் பிரதி அமைச்சரும் பகிரங்கமாகத் தெரிவித்திருந்த போதிலும், ஓராண்டுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் அதனை உறுதிப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, குற்றப் புலனாய்வுத் […]

makumbura bus service | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

‘தாழ் தள’ பஸ் சேவை மாகும்புரவில் ஆரம்பம்..!

  • Apr 21, 2026 - 04:38 PM
  • 0 Comments

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ தேசிய திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோரின் முன்னுரிமையைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘தாழ் தள’ பேருந்து சேவை இன்று (21) மாகும்புர பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர், கண்பார்வை சவால்களைக் கொண்டோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் இலகுவாக ஏறிச் செல்லக்கூடிய வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட 10 பேருந்துகள் இன்று முதல் […]

easter investigation disruption | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை சீர்குலைக்க முயற்சி..!

  • Apr 21, 2026 - 04:33 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், சில அரச அதிகாரிகள் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிமித்தம் இன்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் உள்ளனவா என்ற கேள்வி […]

salindu associates arrested | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

குடு சலிந்துவின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது..!

  • Apr 21, 2026 - 04:24 PM
  • 0 Comments

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான பாணதுறை குடு சலிந்து என்ற மல்ஷித சலிந்துவின் நெருங்கிய உதவியாளர்கள் இருவர் பாயாகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் பாயாகல பகுதியில் இரகசியமாகத் தங்கியிருந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வலானை மத்திய ஊழல் ஒழிப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (21.04.2026) அதிகாலை பாயாகல நிர்மலவத்த மற்றும் கும்புகொட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே […]

aswasuma benefits issue | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அஸ்வசும உதவிகள் சரியான நபர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்..!

  • Apr 21, 2026 - 01:23 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வசும முன்னேற்ற கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அஸ்வசும இணைப்பாளர் கே.விமலநாதன் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (21.04.2026) இடம் பெற்றது. மாவட்டத்தின் 14 பிரதேச செயலக வாரியான முன்னேற்றம் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றம் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டன. இதன் போது […]

eravur pattu water tanker | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு 16000 லீட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் பவுசர் வழங்கி வைப்பு..!

  • Apr 21, 2026 - 01:14 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடிநீர் வழங்குவதற்கான பவுசர் ஒன்றினை புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (21.04.2026) வழங்கி வைத்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியினால் அதிகளவு பாதிக்கும் பிரதேச செயலாளர் பிரில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடி நீர் விரியோகத்திற்கான 16000 லீட்டர் கொள்ளவு கொண்ட பவுசர் அனர்த்த நிவாரண சேவை நிலையத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊