tension at the fasting protest site in ruwanwelisaya | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ருவன்வெலிசாய உண்ணாவிரத போராட்ட களத்தில் பதற்றம்..!

  • Nov 12, 2026 - 04:36 PM
  • 0 Comments

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை முன்றலில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த பிக்குகள், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு ரஜங்கனயே சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் வருகை தந்தபோதே அங்கு பதற்றம் உருவானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, ருவன்வெலிசாய விகாரை முன்றலில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு, நாளை (13) கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி […]

anojans family meets president to express their gratitude | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்து நன்றி கூறிய அனோஜன் குடும்பத்தினர்..!

  • Nov 12, 2026 - 04:34 PM
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிவராசா அனோஜன் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்காகத் தலையீடு செய்தமை தொடர்பில், அவரது குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பானது ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11.11.2026) முற்பகல் நடைபெற்றுள்ளது. இதன்போது அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இலங்கைக் மக்களுக்காக எத்தகைய சந்தர்ப்பத்திலும் குரல் கொடுப்பது தமது பொறுப்பாகும் எனத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சிவராசா அனோஜனை விடுதலை செய்ததற்காக சவூதி […]

two arrested for driving under the influence in jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் போதையில் சாரத்தியம் – இருவர் கைது..!

  • Nov 12, 2026 - 04:27 PM
  • 0 Comments

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் செம்மணி பகுதியில் வாகனங்களை நிறுத்தி சாரதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இருவர் போதையில் சாரத்தியம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் இணைந்து வீதியில் பயணித்த பொது போக்குவரத்து உள்ளிட்ட வாகன சாரதிகள் 52 பேரிடம் போதைப்பொருள் பாவித்துள்ளனரா என்பது தொடர்பிலான சோதனைகளை மேற்கொண்டனர் குறித்த சோதனை நடவடிக்கையில் கார் ஒன்றில் மனைவி பிள்ளைகளுடன் வந்திருந்த நபர் உள்ளிட்ட இருவர் போதைப்பொருள் […]

mass protest calling for justice | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாபெரும் நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டம்..!

  • Nov 12, 2026 - 03:28 PM
  • 0 Comments

பொறுப்பற்ற வாகன ஓட்டத்தால் பறிபோன உயிர் நிசாம் ஹாஜியாரின் மரணத்திற்கு நீதி கோரி பட்டியடிப்பிட்டியில் பேரணி பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத வாகன ஓட்டத்தால் வீதிகளில் அநியாயமாகப் பறிபோகும் உயிர்களுக்கு நீதி கோரியும், வீதிப் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வலியுறுத்தியும் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி பகுதியில் மாபெரும் நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டம் வியாழக்கிழமை (11) மாலை இடம்பெற்றது. கடந்த 06ஆம் திகதி இரவு, இஷாத் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குச் சென்றுகொண்டிருந்த அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியைச் சேர்ந்த நிசாம் ஹாஜியார் என்பவர், 17 வயதுடைய […]

new central government funding arrangement puts point pedro urban council under pressure | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மத்திய அரசின் புதிய நிதி ஏற்பாட்டால் பருத்தித்துறை நகரசபைக்கு நெருக்கடி..!

  • Nov 12, 2026 - 03:20 PM
  • 0 Comments

நகரசபையின் ஊழியர் சம்பளத் தொகையினை வழங்குவதில் மத்திய அரசு குறைப்புச் செய்து அதனை நகரசபையின் நிதி வருமானத்தில் ஈடுகட்டும் புதிய ஏற்பாட்டினால் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகரசபை விசேட அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்தின் முதலாவது வாசிப்பிற்காக நேற்றைய தினம் புதன்கிழமை விசேட சபை அமர்வு நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்றது. […]

omanthai central college student wins first place at national level in professor thura raja memorial leadership challenge | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பேராசிரியர் மாமனிதர் துரைராஜா நினைவு தலைமைத்துவச் சவாலில் ஓமந்தை மத்திய கல்லூரி மாணவி தேசிய மட்டத்தில் முதலிடம்..!

  • Nov 12, 2026 - 03:16 PM
  • 0 Comments

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா நினைவு தலைமைத்துவச் சவால் 2025/26” போட்டியில் வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரியைச் சேர்ந்த தரம் 10 மாணவி மகேந்திரராசா கம்சிகா தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற மாணவிக்கான வெற்றிப் பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் சான்றிதழ் என்பன நேற்று (11.11.2026) பாடசாலையின் காலை ஒன்றுகூடலின்போது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் சுமார் 300 மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியின் […]

two arrested in chavakachcheri with sword knuckle duster and heroin in benz car | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரியில் பென்ஸ் காரில் வாள், நக்கிள்ஸ் கிளிப் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது..!

  • Nov 12, 2026 - 02:30 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு , மூன்று தினங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் ,நேற்றைய தினம் புதன்கிழமை மீண்டும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் சாவகச்சேரி கனகம்புளியடி சந்திக்கு அண்மித்த பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த வேளை, சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் சென்ற “பென்ஸ்” ரக காரை வழிமறித்து சோதனையிட்டனர். அதன்போது காரினுள் நக்கிள்ஸ் கிளிப் , மான் கொம்பில் கைப்பிடி செய்த வாள் என்பவற்றுடன் ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர் […]

special workshop on online child protection held at jaffna district secretariat | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ். மாவட்டச் செயலகத்தில் இணையவழிச் சிறுவர் பாதுகாப்பு குறித்த விசேட செயலமர்வு..!

  • Nov 12, 2026 - 10:17 AM
  • 0 Comments

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில், சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் இணையவழிக் குற்றங்களைத் தடுப்பது தொடர்பான பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இச்செயலமர்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமை அலுவலுத்தின் இணையப் பாதுகாப்புப் பகுப்பாய்வாளர் ஏ. எம். மிவ்ராஜ் வளவாளராகக் கலந்துகொண்டு, சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் இணையவழிக் குற்றங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்களை வழங்கினார். குறிப்பாக, கணினி, இணையம் மற்றும் தனிப்பட்ட […]

heavy rainfall of up to 100mm expected in sri lanka this afternoon | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று பிற்பகலில் 100மிமீ கன மழைக்கு வாய்ப்பு..!

  • Nov 12, 2026 - 09:44 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று (12.11.2026) பிற்பகல் வேளையில் 100 மி.மீ க்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ […]

sri lanka conducts initial test flight for passenger drone service | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவைக்கான முதற்கட்ட சோதனை ஓட்டம்..!

  • Nov 11, 2026 - 01:27 PM
  • 0 Comments

இலங்கையில் ஆளில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சேவையை முன்னெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, அதன் முதலாவது உத்தியோகபூர்வ சோதனை ஓட்டம் இன்று (11.11.2026) கொழும்பு துறைமுக நகர (Port City) வளாகத்தில் இடம்பெற்றது. சீனாவின் Yi Hang நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் eVTOL வகையைச் சேர்ந்த பயணிகள் ட்ரோன் விமானங்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஓடுதளத்தின் (Runway) தேவையின்றி செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கக்கூடிய இந்த ட்ரோன் விமானங்களை பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் அவசர சேவைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக கடந்த […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊