24 hour red alert issued | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

  • Aug 10, 2026 - 10:16 AM
  • 0 Comments

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் இயங்குநிலை வானிலை நிலைமை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்றிலிருந்து (10.08.2026) மு.ப 07.00 மணி முதல் நாளை (11.08.2026) மு.ப 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றருக்கும் […]

veteran journalist arumugam sabeswarans funeral held in jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் யாழில்..!

  • Aug 10, 2026 - 10:14 AM
  • 0 Comments

கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக கனடாவில் , தனது 47ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி காலமானார் அவரது […]

deputy minister forms ward councils in vadamarachchi | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய பிரதி அமைச்சர்..!

  • Aug 10, 2026 - 09:56 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், வடமராட்சியில் , வல்வெட்டித்துறை , தொண்டமானாறு , கெருடாவில் தெற்கு, ஆகிய உள்ளூராட்சி வட்டாரங்களில் , தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை ஆரம்பித்து […]

sand mafia complaint filed against pradeshiya sabha member | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மணல் மாபியாக்களால் பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!

  • Aug 10, 2026 - 09:52 AM
  • 0 Comments

தனது காணியினில் குவித்து வைக்கப்பட்டிருந்த கட்டுமான மணலை புகைப்படம் எடுத்ததாக பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக காணி உரிமையாளரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து நேற்றைய தினம் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் மயூரன் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளார் அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குற்பட்ட. கெற்பெலி பகுதியில் அதிகளவான கட்டுமான மண்ணினை தனி நபர் ஒருவர் ஏற்றுவதாக பிரதேச மக்கள் மற்றும் சமுகமட்ட அமைப்பினர் கெற்பெலி […]

grama niladharis launch trade union action | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த கிராம உத்தியோகத்தர்கள்..!

  • Aug 10, 2026 - 09:43 AM
  • 0 Comments

பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10.08.2026) நாளையும் (11.08.2026) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர். கொழும்பில் நேற்று (09.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார். கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். 2024 ஆம் […]

gce advanced level exam begins today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்..!

  • Aug 10, 2026 - 09:40 AM
  • 0 Comments

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10.08.2026) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அனைத்துப் பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். மேலும் […]

sri lanka thunderstorms expected | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்..!

  • Aug 10, 2026 - 09:37 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று(10.08.2026) பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் […]

36th anniversary of thiraikeni massacre commemorated | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திராய்க்கேணிப் படுகொலை 36 ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல்!

  • Aug 7, 2026 - 03:23 PM
  • 0 Comments

திராய்க்கேணிப் படுகொலையின் 36 ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நேற்று (6) மாலை அங்கு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள திராய்க்கேணி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் 1990.08.06 அன்று நடந்த மிலேச்சத்தனமான படுகொலைகளின் 36 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வே நடைபெற்றது. 1990 ம் ஆண்டு ஆவணி மாதம் 06 ம் திகதியன்று அந்தக் கிராமத்தையண்டி வாழ்ந்த சில முஸ்லீம் காடையர் குழுக்களால் அரச படைகளின் துணையுடன் நடந்தேறிய மிலேச்சத்தனமான படுகொலையில் […]

unrest reported at pallansena prison | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் குழப்பம்..!

  • Aug 7, 2026 - 12:26 PM
  • 0 Comments

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

14 injured in bulathsinhala crash | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

புலத்சிங்கள பகுதியில் கோர விபத்து – 14 பேர் காயம்..!

  • Aug 7, 2026 - 11:49 AM
  • 0 Comments

புலத்சிங்கள, உடுகலகந்த அமரகெதர பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து இன்று (07.08.2026) காலை இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை ஒன்றிற்காக ஊழியர்களை ஏற்றி உடுகலகந்த பகுதியில் இருந்து சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 6 பேர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையிலும், 8 பேர் புலத்சிங்கள பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 பேர் பெண்கள் அடங்குவதுடன், சாரதி உட்பட மேலும் இரு ஆண்கள் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp