போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் செம்மணி பகுதியில் வாகனங்களை நிறுத்தி சாரதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இருவர் போதையில் சாரத்தியம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் இணைந்து வீதியில் பயணித்த பொது போக்குவரத்து உள்ளிட்ட வாகன சாரதிகள் 52 பேரிடம் போதைப்பொருள் பாவித்துள்ளனரா என்பது தொடர்பிலான சோதனைகளை மேற்கொண்டனர்
குறித்த சோதனை நடவடிக்கையில் கார் ஒன்றில் மனைவி பிள்ளைகளுடன் வந்திருந்த நபர் உள்ளிட்ட இருவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதியாகியுள்ளது
அதனை அடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.



