உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பேராசிரியர் மாமனிதர் துரைராஜா நினைவு தலைமைத்துவச் சவாலில் ஓமந்தை மத்திய கல்லூரி மாணவி தேசிய மட்டத்தில் முதலிடம்..!

omanthai central college student wins first place at national level in professor thura raja memorial leadership challenge | Pathivu News

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா நினைவு தலைமைத்துவச் சவால் 2025/26” போட்டியில் வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரியைச் சேர்ந்த தரம் 10 மாணவி மகேந்திரராசா கம்சிகா தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற மாணவிக்கான வெற்றிப் பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் சான்றிதழ் என்பன நேற்று (11.11.2026) பாடசாலையின் காலை ஒன்றுகூடலின்போது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் சுமார் 300 மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியின் முதற்சுற்றிலிருந்து 80 மாணவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களில் எட்டு மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகினர்.

சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட விடய ஆய்வு (Case Study) முறையில் இப்போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சமூகப் பிரச்சினைகள் தொடர்பான விடய ஆய்வுகளை ஆராய்ந்து, அவற்றுக்கான அடிப்படைக் காரணங்களை அடையாளம் கண்டு, நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன்வைக்கும் வகையில் போட்டிச் சுற்றுகள் அமைந்திருந்தன.

குறிப்பாக, இறுதிச் சுற்றில் பங்குபற்றிய மாணவர்கள் தமது பாடசாலை அல்லது சமூகத்தில் காணப்படும் ஒரு பிரச்சினையைத் தெரிவுசெய்து, அதனைப் பகுப்பாய்வு செய்து, அப்பிரச்சினைக்கான ஆக்கபூர்வமானதும் நடைமுறைப்படுத்தக்கூடியதுமான தீர்வுகளை முன்வைத்தனர்.

மாணவர்களிடையே விமர்சனச் சிந்தனை, பிரச்சினைகளை அடையாளம் காணும் திறன், தீர்வுகளை உருவாக்கும் ஆற்றல், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதை இப்போட்டி பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது.

கல்வித்துறைக்கும் சமூகத்திற்கும் அளப்பரிய பங்களிப்புகளை வழங்கிய பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா அவர்களின் நினைவாகவும், அவரது சிந்தனைகளையும் ஆளுமையையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கிலும் இப்போட்டி முன்னெடுக்கப்பட்டது.

பாடநூல் அறிவுடன் மாத்திரம் நின்றுவிடாமல், தம்மைச் சூழவுள்ள சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்குத் தீர்வுகாண முன்வரும் ஆற்றல்மிக்க இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை இம்முயற்சி வலியுறுத்துகின்றது.

கல்விக்கான இலட்சியப் பயணம் என்ற சிந்தனையுடன் கடந்த பத்து ஆண்டுகளாகக் கல்வி, வாசிப்பு, தலைமைத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் சிறகுகள் அமையம், மாணவர்களைச் சமூக மாற்றத்திற்குப் பங்களிக்கும் ஆளுமைகளாக உருவாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இப்போட்டியை முன்னெடுத்துள்ளது.

 

Pathivu News Pathivu NewsPathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊