lorry car accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாரஊர்தியுடன் மகிழுந்தும் மோதி கோரவிபத்து..!

  • Jul 6, 2026 - 10:42 AM
  • 0 Comments

நேற்றைய தினம் இரவு சாவகச்சேரி நுணாவில் வைரவர்கோயிலடி சந்தி பகுதியில் பாரஊர்தியுடன் பின்புறத்தில் சென்று மோதிய மகிழுந்து சாரதி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டுள்ளனர். காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2395977360886954

ymma achiever awards | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

YMMA ஏற்பாட்டில் சாதனையாளர் கௌரவிப்பு..!

  • Jul 6, 2026 - 10:32 AM
  • 0 Comments

அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அதிபர் MIM.றியாஸ் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக “2026 ஆம் ஆண்டின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ்” வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் 8A,B தரச் சித்தியைப் பெற்று(English Medium)சாதனை படைத்த அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மகளீர் கல்லூரி மாணவி சஹாப்டின் பாத்திமா சுஹா அவர்களின் இல்லத்திற்கு நேற்று (05.07.2026) மாலை நேரில் சென்று YMMA அமைப்பினர் குறித்த மாணவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து […]

negombo prison probe | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்;விசாரணை நடத்த குழு ஒன்று நியமனம்..!

  • Jul 6, 2026 - 10:12 AM
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே நேற்று (05.07.2026) மதியம் 1.00 மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டிருந்தது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் […]

accident prevention week | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்..!

  • Jul 6, 2026 - 09:59 AM
  • 0 Comments

11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை இன்று (06.07.2026) முதல் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இந்த விபத்துத் தடுப்பு வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்குச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கிச் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களில் கணிசமான சதவீதமானோர் திடீர் விபத்துக்கள் காரணமாகவே சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுதல், வீதி விபத்துக்கள், வேலைத் தளங்களில் ஏற்படும் விபத்துக்கள், நீரில் மூழ்கி ஏற்படும் விபத்துக்கள் மற்றும் வீடுகளில் […]

dengue death risk | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

டெங்கு மரணங்கள் அதிகரிக்கும் அபாயம்..?

  • Jul 6, 2026 - 09:55 AM
  • 0 Comments

மேல் மாகாணத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் உச்சக் கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நோயாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்களைப் பராமரிக்கும் நடவடிக்கைகள் கடுமையான சிரமத்திற்கும் அபாயத்திற்கும் உள்ளாகியுள்ளதாக அதன் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். நோயாளர்கள் அறிக்கைப்படுத்தப்படுவது இவ்வாறு அதிகரிப்பதன் காரணமாக, அதற்கு இணையாக வரும் நாட்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார். தற்போது நாடு […]

bus fare revision | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று முதல் அமுல் ஆகும் பஸ் கட்டண திருத்தம்..!

  • Jul 6, 2026 - 09:51 AM
  • 0 Comments

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று (06.07.2026) முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்களை 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணையாக சொகுசு பேருந்து கட்டணங்களும் அதிவேக வீதிகளுக்கான பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நடைமுறைக்கு வரும் புதிய […]

dilith accuses government | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அனைத்து தரப்பினரையும் ஏமாற்றியுள் அரசு..! திலித் குற்றச்சாட்டு

  • Jul 6, 2026 - 09:47 AM
  • 0 Comments

தற்போதைய அரசாங்கம் தொழில்முனைவோர் உட்பட தங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்த அனைத்து தரப்பினரையும் ஏமாற்றியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ‘தைரியமான மனிதர்களை உருவாக்குவோம் – தொழில்முனைவோருக்கு கைகொடுப்போம்’ என்ற தலைப்பில் நேற்றையதினம் (05.07.2026) கோட்டையில் நடைபெற்ற தொழில்முனைவோர் மற்றும் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த திலித் ஜயவீர, “இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள், இதன் மீது பெரும் […]

australia seventh world cup | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

7 வது முறையாக உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா..!

  • Jul 6, 2026 - 09:43 AM
  • 0 Comments

கிரிக்கெட்டின் தலைமையகம் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க லோர்ட்ஸ் (Lord’s) மைதானத்தில், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் தோற்கடித்து, அவுஸ்திரேலிய மகளிர் அணி இருபதுக்கு-20 உலக சாம்பியன்களாக முடிசூடியுள்ளனர். இதன்படி, 7ஆவது முறையாகவும் டி20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ள அவர்கள், தங்களுக்கு சவாலளிக்க வேறு எந்தவொரு அணியும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளனர். நேற்று நிறைவடைந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து […]

neduntheevu housing | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நெடுந்தீவில் வீட்டுத்திட்ட வீடுகளை கையளித்த அமைச்சர்கள்..!

  • Jul 6, 2026 - 09:36 AM
  • 0 Comments

நெடுந்தீவில் வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(05.07.2026) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து, அதன் சாவியை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதேவேளை வீட்டுத்திட்டத்தின் அடுத்த கட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட மேலதிக பயனாளிகளுக்கு வீடமைப்புப் பணிகளை ஆரம்பிப்பதற்கான காசோலைகளும் இன்றைய தினம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க,இளங்குமரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

sri lanka weather today 9 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jul 6, 2026 - 09:27 AM
  • 0 Comments

06.07.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊