jaffna family health day | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் போதனாவில் இடம்பெற்ற குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தினம்..!

  • Jul 7, 2026 - 10:38 AM
  • 0 Comments

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தினம் நேற்றைய தினம் திங்கட்கிழமை(06.07.2026) சிறப்பாக நடைபெற்றது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஆண்டுதோறும் சுமார் 5,000 சுகப்பிரசவங்கள் நடைபெறுகின்றன. இச்சுகப்பிரசவங்கள் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெறுவதில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் (PHM) முக்கியமான மற்றும் மறுக்க முடியாத பங்காற்றுகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பும் தொழில்முறை சேவையும் பாராட்டி கௌரவிக்கும் நோக்கில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி […]

4250 ton sugar seized | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனி மூட்டைகளுடன் நால்வர் கைது..!

  • Jul 7, 2026 - 09:51 AM
  • 0 Comments

பேலியகொடை, பெத்தியாகொட பகுதியில் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனியுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, மனித நுகர்வுக்குத் தகுதியற்ற இந்தச் சீனித் தொகையுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, சுமார் 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான 85,000 சீனி மூட்டைகளை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவெல, அங்கொட, […]

pazha nedumaran gajendrakumar meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பழநெடுமாறன் ஐயாவிற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு..!

  • Jul 7, 2026 - 09:47 AM
  • 0 Comments

இச்சந்திப்பு நேற்று (06.07.2026) முற்பகல் 11.00 மணியளவில் வேங்கைவாசலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.   காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1607261271074636

sri lanka road deaths | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் வாகன விபத்துக்களில் 1,424 பேர் உயிரிழப்பு..!

  • Jul 7, 2026 - 09:41 AM
  • 0 Comments

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 05 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,355 உயிராபத்துக்களை ஏற்படுத்தும் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார். தேசிய விபத்து தடுப்பு வாரம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் […]

sri lanka lead 142 runs | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

142 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி..!

  • Jul 7, 2026 - 09:38 AM
  • 0 Comments

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ஓட்டங்களை எடுத்துள்ளது. இதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட 142 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள இலங்கை அணி, போட்டியின் இறுதி நாளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. போட்டியில் நாணயச் […]

negombo prison incident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; நடந்தது இதுவா?

  • Jul 7, 2026 - 09:32 AM
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியின் பாதுகாப்பிற்காக பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நேற்று (06) இரவு நீர்கொழும்பு சிறைச்சாலையின் நிலைமையை அவதானித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய […]

sri lanka today weather 2 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jul 7, 2026 - 09:27 AM
  • 0 Comments

07.07.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் […]

negombo prison tension | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்; காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

  • Jul 6, 2026 - 12:52 PM
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05.07.2026) மதியம் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இன்று (06.07.2026) மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற மோதலில் கைதிகள் இருவர் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று ஏற்பட்டுள்ள புதிய மோதல் சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மதியம் 1 மணியளவில் விளக்கமறியல் கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் […]

vavuniya lake protest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியாவில் குளத்தை பாதுகாக்க கோரி போராட்டம்..!

  • Jul 6, 2026 - 12:00 PM
  • 0 Comments

வவுனியா கோவில்குளத்தை காப்போம் கிராம மக்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம்(06.07.2026) குறித்த போராட்டம் இடம்பெற்றது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1647618899645591

mathagal accident death | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாதகல் பகுதியில் விபத்து; முதியவர் பலி..

  • Jul 6, 2026 - 11:40 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 80 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மாதகல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சில்லாலையை சேர்ந்த நபரும் , சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊