dr mufisal abu bakar india visit participates as resource person at international gandhian peace conference | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியா பயணம்: சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகப் பங்கேற்பு..!

  • Oct 7, 2026 - 10:07 AM
  • 0 Comments

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகக் (Resource Person) கலந்துகொள்வதற்காக, பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியாவிற்குப் பயணமாகிறார். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜிநகரில் (ഔரங்காபாத்) உள்ள மகாத்மா காந்தி மிஷன் (MGM) பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஒக்டோபர் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் இம்மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. மகாத்மா காந்தி மிஷன் (MGM) மற்றும் மகாராஷ்டிரா காந்தி ஸ்மாரக் நிதி (புனே) ஆகிய நிறுவனங்கள் இணைந்து […]

increased responsibilities and commitment of principals analysis of todays education environment | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அதிபர்களின் அதிகரிக்கப்பட்ட பொறுப்புகளும் அர்ப்பணிப்பும்: இன்றைய கல்விச் சூழலில் ஓர் அலசல்..!

  • Oct 7, 2026 - 10:02 AM
  • 0 Comments

நிர்வாகத் தலைவராக மட்டுமன்றி பல்முகப் பரிமாணங்களுடன் இயங்கும் நவீனாசிரியர் சமூகத்தின் சுமை. கல்முனை அஸ்-ஸூஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யாவின் ஆக்கப்பூர்வமான பார்வை மாறிவரும் தற்போதைய கல்விச் சூழலில் பாடசாலை அதிபர் ஒருவரின் பணி வெறும் நிர்வாகத்தோடு முடிந்துவிடாது, சமூக உருவாக்கத்தின் முதன்மைச் சுமையைத் தாங்கும் அத்தியாவசியத் தலைமைத்துவமாக மாறியுள்ளதாகக் கல்முனை அஸ்-ஸூஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இன்றைய அதிபர்களின் பொறுப்புகளும் அர்ப்பணிப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட கருத்துப் […]

foundation laid for homes for families affected by cyclone in badulla | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பதுளையில் டித்வாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடுகளுக்கு அடிக்கல்..!

  • Oct 7, 2026 - 09:47 AM
  • 0 Comments

டித்வா’ புயலினால் பதுளை மாவட்டத்தில் வீடுகளை இழந்த மற்றும் அதிக ஆபத்தான நிலைமைகளுக்கு முகங்கொடுத்த குடும்பங்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று (07) ஆரம்பிக்கப்படவுள்ளன. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. பதுளை மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதுடன், இதற்கான காணி வசதிகளை அரசாங்கமே […]

19 year old arrested with ice drugs | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞர் கைது..!

  • Oct 7, 2026 - 09:46 AM
  • 0 Comments

தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாலிபுல்ல தோட்டம் பகுதியில் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (06.10.2026) இரவு இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 19 வயதுடைய கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவராவார். கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

thunderstorms in sri lanka this afternoon | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று பிற்பகலில் இடியுடன் கூடிய மழை..!

  • Oct 7, 2026 - 09:44 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திணைக்களம் இன்று (07.10.2026) அதிகாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. […]

young writers 2026 national student creative writing competition | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

“இளம் எழுத்துகள் 2026” நாடளாவிய மாணவர் படைப்பாக்கப் போட்டி..!

  • Oct 6, 2026 - 02:34 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம்: சிறகுகள் அமையத்தின் பத்து ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம், கற்பனைத்திறன், படைப்பாற்றல், எழுத்தாற்றல் மற்றும் ஆய்வுச் சிந்தனையை வளர்க்கும் நோக்கில் “வாசிப்பு மாதம் 2026 – இளம் எழுத்துகள் 2026” எனும் நாடளாவிய மாணவர் படைப்பாக்கப் போட்டி முன்னெடுக்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட சிறகுகள் அமையம், கல்வி, வாசிப்பு, இளைஞர் தலைமைத்துவம், சமூகப் பங்கேற்பு, சமூக சேவை, சுற்றுச்சூழல் மற்றும் ஆவணப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கடந்த பத்து ஆண்டுகளாக […]

kopay teachers training college teachers day event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் தினம்..!

  • Oct 6, 2026 - 02:30 PM
  • 0 Comments

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(06.10.2026) கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றன. கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகவும் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளர் பரமேஸ்வரி நாகரட்ணம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். நிகழ்வின் முன்னதாக விருந்தினர்களும் கலாசாலை விரிவுரையாளர்களும் கலாசாலை சிவன் ஆலயத்தில் இருந்து மங்கல வாத்திய சகிதம் விழா மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர் தொடர்ந்து மண்டப நிகழ்வில் […]

vattu hindu college founder memorial day and awards ceremony | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வட்டு இந்துக் கல்லூரியின் நிறுவனர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும்..!

  • Oct 6, 2026 - 02:23 PM
  • 0 Comments

வட்டு இந்துக் கல்லூரியின் நிறுவனர் நினைவு நாளும் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பரிசளிப்பு விழாவும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(06.10.2026) கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கல்வி, விளையாட்டு, இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கியதுடன், தேசிய மட்டத்தில் சிறந்து விளங்கிய மாணவர்களையும் சிறப்பாகக் கௌரவித்தார். அத்துடன் நிகழ்வின் முக்கிய அம்சமாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சிறப்பு […]

karaitivu vipulananda montessori childrens day at batticaloa library | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டு.மாநகர பொது நூலகத்தில் காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரியின் சிறுவர் தின விழா..!

  • Oct 6, 2026 - 12:10 PM
  • 0 Comments

காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி பாடசாலை மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் மேயர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நேற்று முன்தினம் (04.10.2026) மட்டக்களப்பு பொது நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. காரைதீவில் இருந்து இதற்கென விபுலானந்தா மொன்டிசோரி மாணவர்கள் , பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா ஒழுங்கமைப்பில் விசேட பேரூந்தில் மட்.பொது நூலகத்திற்கு சென்றிருந்தார்கள். அங்கு அவர்களுக்கு விசேட வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினரும், நூலகக் குழுத் தலைவருமான […]

health minister nalinda praises sri sathya sai sanjeevani hospital | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சுகாதார அமைச்சர் நளிந்த, ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலைக்கு விசேட பாராட்டு..!

  • Oct 6, 2026 - 12:00 PM
  • 0 Comments

செயலாளர் அனில் ஜாசிங்க நேரில் சென்று கையளிப்பு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையின் தன்னலமற்ற இலவச இதய சிகிச்சைகள் பணிக்காக விசேட பாராட்டு விருதினை வழங்கியுள்ளார். அமைச்சரின் விசேட பாராட்டு விருதினை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க நேற்று முன்தினம் மட்டக்களப்பு கிரான்குளத்திற்கு நேரடியாக சென்று கையளித்தார். மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையில் மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வரும் இதயநோய் சிகிச்சைச் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊