president to hold talks with maha sangha today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் முப்பீடங்களின் மகா சங்கத்தினருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல்..!

  • Oct 8, 2026 - 09:42 AM
  • 0 Comments

முப்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (08.10.2026) நடைபெறவுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைவாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலபொடஅத்தே ஞானசார தேரர், சாதாரண உடைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை தொடர்பில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு முப்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களால் அனுப்பப்பட்ட கடிதம் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 1:00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

npp mp chandana sooriyaarachchi arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி கைது..!

  • Oct 8, 2026 - 09:41 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07.10.2026) இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

heavy rainfall exceeds 100mm in several parts of sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ-க்கும் அதிகளவான பலத்த மழை..!

  • Oct 8, 2026 - 09:39 AM
  • 0 Comments

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் […]

kachchai public library hosts colouring competition for preschool students | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கச்சாய் பொது நூலக எல்லைக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி..!

  • Oct 7, 2026 - 11:25 AM
  • 0 Comments

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கச்சாய் பொது நூலக எல்லைக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி எதிர்வரும் 09.10.2026 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. காலை 9.30மணிக்கு நூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ள இப் போட்டியில் நூலக எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு முன்பள்ளியில் இருந்தும் தலா இரு மாணவர்களை ஆவண செய்யுமாறு நூலகத்தினர் முன்பள்ளி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர். இதன்போது வர்ணம் தீட்டுவதற்கான படம் நூலகத்தினரால் வழங்கப்படும் எனவும் வர்ணம் தீட்டும் கலர் சோக் மாத்திரம் கொண்டு வருதல் வேண்டும் என நூலகத்தினர் […]

danushka to receive amara nilakshan memorial gold medal | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

‘அமரர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்’ பெறும் தனுஷ்கா..!

  • Oct 7, 2026 - 11:13 AM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற திருகோணமலையைச் சேர்ந்த மாணவி தனுஷ்கா சஞ்ஜீவவிற்கு, ஊடகத்துறையின் உயரிய கௌரவமான ‘அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்’ வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாளான இன்றைய தினம் புதன்கிழமை இந்த மதிப்பார்ந்த தங்கப் பதக்கம் மாணவி தனுஷ்காவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் கல்வி பயின்று, சமூகத்தின் குரலாக ஒலித்த இளம் […]

jaffna university convocation second day session | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – இரண்டாம் நாள் அமர்வு..!

  • Oct 7, 2026 - 11:09 AM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய நிலையில் , இன்றைய தினம் புதன்கிழமை இரண்டாம் நாள் அமர்வுகள் நடைபெற்றன. இந்தப் பட்டமளிப்பு வைபவம் நாளைய தினம் வியாழக்கிழமை வரை மூன்று நாள்களும், ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இம்முறை பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், […]

vadamarachchi south west cultural festival | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

வடமராட்சி தெற்கு மேற்கு பண்பாட்டு விழா..!

  • Oct 7, 2026 - 11:02 AM
  • 0 Comments

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய “பிரதேச பண்பாட்டு விழா 2026”, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கரணவாய் மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில், “எழுத்து சீர்காழி சங்கீதபூஷணம்” செல்லத்துறை குமாரசாமி அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன் சிறப்பு விருந்தினராகவும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண […]

gender equality awareness workshop | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பால்நிலை சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு..!

  • Oct 7, 2026 - 10:53 AM
  • 0 Comments

பால்நிலை சமத்துவம் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள், கொள்கை ரீதியான கடப்பாடுகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் கே. சிவகரன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்துதல், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் அவற்றினால் ஏற்படும் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வதற்கான அறிவையும் புரிதலையும் உத்தியோகத்தர்களிடையே மேம்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இச் […]

norway road safety conference kilinochchi rotary members participate | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நேர்வேயில் வீதி போக்குவரத்துப் பாதுகாப்பு மாநாடு – கிளிநொச்சி ரோட்டரி கழகத்தினர் பங்கேற்பு..!

  • Oct 7, 2026 - 10:44 AM
  • 0 Comments

வளர்ச்சியடைந்த நாடுகளில் மேற்கொள்ளப்படுவது போன்ற வீதிப் பாதுகாப்பு முயற்சிகளை இலங்கையிலும் முன்னெடுக்கும் வகையில், கிளிநொச்சி ரோட்டரி கழகத்தின் Transport Safety Academy நிறுவப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கிளிநொச்சி ரோட்டரி கழக உறுப்பினர்கள் நோர்வேயின் பேர்கன் நகருக்கு அண்மையில் சென்றிருந்தனர். அங்கு Western Norway University இல் வீதி மற்றும் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற மாநாட்டிலும் கலந்துகொண்டனர். அதில் கலந்து […]

temples increase but spirituality does not violence persists | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆலயங்கள் பெருகி வருகின்ற போதிலும் ஆன்மீகம் வளரவில்லை;வன்முறைகளுக்கும் பஞ்சமில்லை..!

  • Oct 7, 2026 - 10:32 AM
  • 0 Comments

நேர்காணல் த.சுபேசன் யாழ்ப்பாணத்தில் முதலாவது சர்வதேச சைவ மாநாட்டினை வெற்றிகரமாக நிகழ்த்திய மாநாட்டு அமைப்பாளர் சமூகசேவகர் திரு நடராசா சச்சிதானந்தன் உடனான நேர்காணல். 1)கேள்வி-அண்மையில் யாழ்ப்பாணத்தில் முதலாவது சர்வதேச சைவ மாநாடு உங்களுடைய ஏற்பாட்டில் பிரணவம் அறக்கட்டளை ஊடாக இடம்பெற்றது. மேற்படி மாநாடு என்ன நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டது? பதில்-இன்றைய வடக்கு மாகாணம் எதனை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது என்பதனை நாம் அன்றாட செய்திகள் வாயிலாக பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.பலர் அதனை செய்திகளாகவே பார்த்து விட்டு கடந்து […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊