sritharan prison visit | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சொல்லிசை பாடகரை சிறையில் சந்தித்த சிறிதரன் எம்.பி..

  • Jun 8, 2026 - 10:55 AM
  • 0 Comments

எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார். குறித்த பாடகரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ள சிறிதரன் இன்றைய தினம் , பாடகரை சிறைச்சாலையில் சந்தித்து , நம்பிக்கையூட்டியுள்ளார்.

missing fisherman rescued | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு..!

  • Jun 8, 2026 - 10:20 AM
  • 0 Comments

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர், சக மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையின் மூலம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் வருமாறு: பரபரப்பான சூழலும் தேடுதல் வேட்டையும் செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (07.06.2026) இரவு வழமை போல் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரமாகியும் அவர் கரை திரும்பாததால் குடும்பத்தினரிடையே […]

philippines earthquake | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

  • Jun 8, 2026 - 10:06 AM
  • 0 Comments

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (08.06.2026) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் கூறியுள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எனினும், இரு நாடுகளிலும் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. […]

minister visits jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழிற்கு விஜயம் செய்த மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்..!

  • Jun 8, 2026 - 09:55 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம்(07.06.2026) ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் “பெண்கள் சந்திப்பு” நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன் போது பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. முன்னதாக பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து மதியம் மல்லாகம் கல்லாரை வளர்மதி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து […]

rainy weather continues | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றும் மழையுடனான வானிலை தொடரும்..!

  • Jun 8, 2026 - 09:48 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அதேநேரம், அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் […]

police custody death probe | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு..!

  • Jun 8, 2026 - 09:44 AM
  • 0 Comments

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் உள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படும் சிறைக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 119 இலக்க முறைப்பாட்டிற்கமைய குடும்பப் பிரச்சினை தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார். குறித்த உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் […]

valaichenai guru pooja | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வாழைச்சேனை முத்தமிழருவி அறநெறிப் பாடசாலை நடாத்திய திருஞானசம்பந்தர் குருபூசை..!

  • Jun 8, 2026 - 09:37 AM
  • 0 Comments

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை, கண்ணகிபுரம் முத்தமிழருவி அறநெறிப் பாடசாலை நடாத்திய திருஞானசம்பந்தர் குருபூசை நிகழ்வும்,மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) அறநெறிப் பாடசாலையில் இடம்பெற்றது. அறநெறிப் பாடசாலை அதிபர் சந்திரசேகரம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விசேட அதிதியாக இந்தியா காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ.மாணிக்கம் நடராஜன் கலந்து சிறப்பித்தார். அத்தோடு கண்ணகிபுரம் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு நிருபர் […]

sritharan letter president | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்…!

  • Jun 8, 2026 - 09:26 AM
  • 0 Comments

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள உதயநகர் மேற்கு, கிளிநொச்சியை நிரந்தர முகவரியாகக் கொண்ட சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அவர்களின் விடுதலை தொடர்பான விடயத்தினை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன். தனது இனத்தின் […]

kalmunai environment day | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கல்முனையில் சர்வதேச சூழல் தினம் அனுஷ்டிப்பு..!

  • Jun 5, 2026 - 04:12 PM
  • 0 Comments

சர்வதேச சூழல் தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் முதலில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் சிரமதான நிகழ்வுகள் முதலில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இன்று(05)அப்பாடசாலை அதிபர் தலைமையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவர் பல்வேறு சூழல் சார் கருத்துக்களை வழங்கினார். இதன் போது இயற்கை ஒரு மடல் எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு […]

chavakachcheri tree planting | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சாவகச்சேரியில் மரநடுகை..!

  • Jun 5, 2026 - 04:04 PM
  • 0 Comments

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2026 வெள்ளிக்கிழமை தென்மராட்சி அபிவிருத்திக் கழகமும் (Thenmaradchi Development Association) கிரீன் குளோப் (Green Globe) அமைப்பும் இணைந்து சாவகச்சேரி நகர சபையுடன் கைகோர்த்து இன்று(05.06.2026) காலை 6.30மணிக்கு தனங்கிளப்பு வீதி, கண்ணாடிப்பிட்டி இந்து மயானம் ஆகிய பகுதிகளில் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வு சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஸ் தலைமையில் , உபதவிசாளர் ஞா.கிசோர் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் என்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் Dr. […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp