rupee value drop | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை ரூபாயின் பெறுமதி மறுபடியும் வீழ்ச்சி..!

  • Jun 5, 2026 - 12:00 PM
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியான வீழ்ச்சியினை இன்றும் (05.06.2026) பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.27 ரூபாயாக காணப்படுகின்றது. அதேநேரம் அதன் விற்பனை விலை 342 ரூபாவாக அமைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

mullaitivu environment day | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிப்பு..!

  • Jun 5, 2026 - 11:51 AM
  • 0 Comments

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (2026.06.05) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் “பசுமை அலுவலகம் – பசுமை சமூகம்” என்ற கருப்பொருளின் கீழ் விசேட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, காலை 9.00 மணிக்கு தேசியக் கொடியேற்றுதல் மற்றும் தேசிய கீதம் இசைத்தலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பசுமை அலுவலக உறுதிமொழி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வுறுதிமொழியின் ஊடாக தூய்மையான, பசுமையான மற்றும் […]

colombo water supply issue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் கோளாறு..!

  • Jun 5, 2026 - 11:42 AM
  • 0 Comments

கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயிலேயே இந்த திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று (05.06.2026) இரவு 8.00 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர […]

pon sivakumaran remembrance | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்..!

  • Jun 5, 2026 - 11:37 AM
  • 0 Comments

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(05.06.2026) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.  

mother daughter accident death | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விபத்தில் சிக்கிய தாயும், மகளும் அடுத்தடுத்து உயிரிழப்பு..!

  • Jun 5, 2026 - 11:24 AM
  • 0 Comments

புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும், மகளும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தாயான சமுத்ரா அலுவிஹார (வயது 52) மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது மூத்த மகளான சஜீனி மகேஷிகா (வயது 32) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். கடந்த முதலாம் திகதி இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும், முச்சக்கர […]

umaiyalpuram tree planting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகளை நடும் விசேட நிகழ்வு..!

  • Jun 5, 2026 - 11:18 AM
  • 0 Comments

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகளை நடும் விசேட நிகழ்வு இன்று (05.06.2026) வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது. இந்த மாபெரும் மர நடுகைத் திட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் உமையாள்புரம் கிராம மக்கள் இணைந்து இந்தச் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு […]

environment day 2026 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினம் இன்றாகும்..!

  • Jun 5, 2026 - 10:18 AM
  • 0 Comments

1972-ஆம் ஆண்டு முதல், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, சமகால சுற்றுச்சூழல் கருப்பொருளின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உலகளாவிய ரீதியில் எழும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து உலகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இந்நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் என்ற சமகால மற்றும் மிக முக்கியமான உலகளாவிய கருப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

sl weather today 25 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jun 5, 2026 - 09:59 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05.06.2026) இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் […]

protect thenmaradchi groundwater | Pathivu News முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

தென்மராட்சியின் நிலத்தடி நீரினை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்..! இயற்கையின் நண்பர்கள் இயக்கம் கோரிக்கை

  • Jun 5, 2026 - 09:56 AM
  • 0 Comments

தென்மராட்சியின் நிலத்தடி நீரினை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இயற்கையின் நண்பர்கள் இயக்கம் பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மராட்சி பிரதேசத்தின் நிலத்தடிநீர் வளம் மற்றும் பொதுமக்களின் சுகாதாரம் மிகவேகமான அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும், உலகச் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டாவது தென்மராட்சி பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் விழித்துக்கொண்டு, உடனடியாக இறுக்கமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ‘இயற்கையின் நண்பர்கள் இயக்கம்’ அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் […]

karaithivu debate victory | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உள்ளூராட்சிமன்றங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் காரைதீவு பிரதேச சபை அபார வெற்றி..!

  • Jun 5, 2026 - 09:51 AM
  • 0 Comments

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம்(FSLGA) ஏற்பாட்டில் மாகாணமட்ட உள்ளூராட்சிமன்றங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் காரைதீவு பிரதேச சபை அபார வெற்றி. காரைதீவூ பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கும் எறாவூர் நகர சபையின் உறுப்பினர்களுக்கும் இடையேயான இப் போட்டியில் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் பெற்ற புள்ளிகள் : 299 எறாவூர் நகர சபையினர் பெற்ற புள்ளிகள் : 254

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp