உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்..! கைது நடவடிக்கைகள் தொடரும் அமைச்சர் சந்திரசேகரன்.

ministerchandrasekaranwelcomeshighcourtrulingarreststocontinue | Pathivu News

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் தொடர்பிலும் கச்சதீவு தொடர்பிலும் இந்திய உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கின்ற நிலையில் இந்திய எல்லையில் தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் கைது செய்வோம் என கடத்தொழில் மற்றும் கடல் வளங்கள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்திய உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் புதன் கிழமை தமிழ்நாடு அரசுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் உண்மை விளக்கத்தை கூறியிருக்கிறது.

அதாவது கச்சதீவு யாருக்கு சொந்தம் என்ற விவாதம் இந்திய தேர்தல் காலங்களில் அநேகமாக பேசுபொருளாக மாறுகின்ற விடயம்.

அது மட்டும் அல்லாது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான ஒரு நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம் எமது மீனவர்களின் உண்மை நிலையை பிரதிபலிக்கும் முகமாக சம்பந்தப்பட்ட மத்திய மாநில அரசுகளுக்கு கருத்துரைள்ளது.

அதாவது இலங்கை கடல் சுத்தமாக இருக்கிறது அதனால் அங்கு மீனினங்கள் அதிகம் பெறுகின்றன இந்திய கடற்பரப்பு அசுத்தமானதால் மீன் இனங்கள் இல்லை அதனால் இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் செல்வது சட்ட விரோதம் என தெரிவித்துள்ளது.

நாங்களும் அதைத்தான் நீண்ட நாட்களாக இந்திய மீனவர்கள் விடயத்தில் கூறி வருகிறோம் எமது கடல் எமது இறையாண்மைக்குள் வராதீர்கள் வந்தால் இலங்கை கடற்படை உங்களை கைது செய்யும் என கூறினோம்.

அதன் அடிப்படையில் 2013க்கு பின்னர் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த சுமார் 2936 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 510 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டன.

எமது அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு வருடங்களில் சுமார் 390 எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 46 விசைப் படகுகளும் கைப்பற்றப்பட்ட நிலையில் 22விசைப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் தமது மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டுவது சட்டவிரோதாம் அவ்வாறு தாண்டினால் இலங்கை கடற்படை அவர்களை கைது செய்யும் என்ற விவரத்தினை இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய கருத்துரையை விளங்கப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊