வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை(17.08.2026) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, பூஜை வழிபாடுகள் இடம்பெற்று காலை 10 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து இடம்பெற்று எதிர்வரும் 09ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , மறுநாள் 10ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் இடம்பெறும்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1199605132359796
What’s your Reaction?

