illegal fishing arrest | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டைக்காடு பகுதியில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது..!

  • Apr 21, 2026 - 04:44 PM
  • 0 Comments

அவர்களின் நான்கு படகுகளும் உபகரணங்களும் பறிமுதல் யாழ்ப்பாணம், கட்டக்காடு கடற்கரைப் பகுதியில் ஒளிக்கற்றைகளைப் (Light Course) பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை ‘வெற்றிலைக்கேணி’ ( Vettalakeni) கடற்படை புலனாய்வுப் பிரிவினர் இன்று(21.04.2026) கைது செய்துள்ளனர். சம்பவ விபரம்: கடந்த 2026 ஏப்ரல் 20 ஆம் தேதி இரவு 10:40 மணியளவில், புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் பிடிபட்டனர். நான்கு சிறு படகுகளில் சட்டவிரோத விளக்குகள் […]

makumbura bus service | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

‘தாழ் தள’ பஸ் சேவை மாகும்புரவில் ஆரம்பம்..!

  • Apr 21, 2026 - 04:38 PM
  • 0 Comments

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ தேசிய திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோரின் முன்னுரிமையைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘தாழ் தள’ பேருந்து சேவை இன்று (21) மாகும்புர பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர், கண்பார்வை சவால்களைக் கொண்டோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் இலகுவாக ஏறிச் செல்லக்கூடிய வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட 10 பேருந்துகள் இன்று முதல் […]

easter investigation disruption | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை சீர்குலைக்க முயற்சி..!

  • Apr 21, 2026 - 04:33 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், சில அரச அதிகாரிகள் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிமித்தம் இன்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் உள்ளனவா என்ற கேள்வி […]

false attack news | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தாக்குதல் என்று பரவும் செய்தியில் உண்மையில்லை..!

  • Apr 21, 2026 - 04:28 PM
  • 0 Comments

கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். அவ்வாறான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என்பதை அவர் மேலும் உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும், ‘கஞ்சிப்பானை இம்ரான்’ என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக […]

salindu associates arrested | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

குடு சலிந்துவின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது..!

  • Apr 21, 2026 - 04:24 PM
  • 0 Comments

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான பாணதுறை குடு சலிந்து என்ற மல்ஷித சலிந்துவின் நெருங்கிய உதவியாளர்கள் இருவர் பாயாகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் பாயாகல பகுதியில் இரகசியமாகத் தங்கியிருந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வலானை மத்திய ஊழல் ஒழிப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (21.04.2026) அதிகாலை பாயாகல நிர்மலவத்த மற்றும் கும்புகொட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே […]

aswasuma benefits issue | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அஸ்வசும உதவிகள் சரியான நபர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்..!

  • Apr 21, 2026 - 01:23 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வசும முன்னேற்ற கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அஸ்வசும இணைப்பாளர் கே.விமலநாதன் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (21.04.2026) இடம் பெற்றது. மாவட்டத்தின் 14 பிரதேச செயலக வாரியான முன்னேற்றம் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றம் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டன. இதன் போது […]

eravur pattu water tanker | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு 16000 லீட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் பவுசர் வழங்கி வைப்பு..!

  • Apr 21, 2026 - 01:14 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடிநீர் வழங்குவதற்கான பவுசர் ஒன்றினை புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (21.04.2026) வழங்கி வைத்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியினால் அதிகளவு பாதிக்கும் பிரதேச செயலாளர் பிரில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடி நீர் விரியோகத்திற்கான 16000 லீட்டர் கொள்ளவு கொண்ட பவுசர் அனர்த்த நிவாரண சேவை நிலையத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந் […]

colombo airport incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பு விமான நிலையத்தில் இந்தியரின் மோசமான செயல்..!

  • Apr 21, 2026 - 01:08 PM
  • 0 Comments

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ (Kush) போதைப்பொருளுடன் வெளிநாட்டு நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய இந்தியப் பிரஜை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

chemmani excavation phase 3 27 april | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 27ஆம் திகதி ஆரம்பம்..!

  • Apr 21, 2026 - 01:03 PM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக 08 வார கால பகுதி தேவை என சட்ட வைத்திய […]

muttur sampur housing project | Pathivu News செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மூதூர், சம்பூர் மேற்கில் வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்..!

  • Apr 21, 2026 - 12:57 PM
  • 0 Comments

இரண்டு வீடுகள் கையளிப்பு மற்றும் புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு. மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் மேற்கு பகுதியில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் நேற்று (20.04.2026) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. ​அரசாங்கத்தின் “சொந்த இடம், அழகான வாழ்க்கை” எனும் திட்டத்தின் கீழ் இந்த வீடமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த இரண்டு வீடுகளும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மூதூர் பிரதேசத்தில் 2025 […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊