புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில். வீடொன்றில் சட்டவிரோதமாக இயங்கிய கொல்களம் – இரண்டு பசுக்கள் உயிருடன் மீட்பு..!

illegal slaughterhouse raided in jaffna two cows rescued alive | Pathivu News
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கொல்களத்தில் இருந்து இரண்டு பசு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் , பெருந்தொகை இறைச்சியும் கைப்பற்றபட்டுள்ளதுடன் , இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து சந்தி பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் இறைச்சியாக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
அதன் போது , மாடுகளை இறைச்சியாக்கி அதனை பங்கு பிரித்துக்கொண்டிருந்த இருவரை பொலிஸார் கைது செய்ததுடன் , அங்கிருந்த பெருந்தொகையான இறைச்சியையும் கைப்பற்றினர்.
வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் , இறைச்சியாக்கும் நோக்குடன் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகளையும் பொலிஸார் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1115250320997812

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊