செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மூதூர், சம்பூர் மேற்கில் வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்..!

muttur sampur housing project | Pathivu News
இரண்டு வீடுகள் கையளிப்பு மற்றும் புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு.
மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் மேற்கு பகுதியில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் நேற்று (20.04.2026) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
​அரசாங்கத்தின் “சொந்த இடம், அழகான வாழ்க்கை” எனும் திட்டத்தின் கீழ் இந்த வீடமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த இரண்டு வீடுகளும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மூதூர் பிரதேசத்தில் 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 206 வீடுகளை நிர்மாணிப்பதற்கென அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ​
தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் 41 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான முதற்கட்டமாக, இரு பயனாளிகளுக்கு நேற்றைய தினம் காசோலைகள் வழங்கப்பட்டதுடன், புதிய வீடுகளுக்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.
​வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்துகொண்டு இத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மூதூர் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நீண்ட நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எப். ரோஷனா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. முஜீப், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் ஒருங்கிணைப்பாளர் எம்.கே.எம். சப்ரான் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
​குறைந்த வருமானம் கொண்ட, வீடற்ற குடும்பங்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வாழ்விடங்களை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1266377048938754

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp