sl weather today 20 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 26, 2026 - 09:59 AM
  • 0 Comments

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளின் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

north land release | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கில் காணிகளில் சிலவற்றை விடுவிக்க நடவடிக்கை..!

  • May 25, 2026 - 11:01 AM
  • 0 Comments

வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் சிலவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் போதிய புரிதல் இன்றி போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியின்படி, மக்களின் நிலங்களை மக்களுக்கே திரும்ப ஒப்படைப்பதற்கான செயல்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. கடந்த […]

foreign cigarette arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று அதிகாலை வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் மூவர் கைது..!

  • May 25, 2026 - 10:24 AM
  • 0 Comments

60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வர முற்பட்ட மூன்று வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று (25.05.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீனப் பிரஜைகள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இந்த சிகரெட்டுக்களை விமான நிலைய பசுமை வழி ஊடாக கடத்திச் செல்ல முயன்றபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க அதிகாரிகளின் அவதானத்தைத் […]

judge rizwan suspension | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் இடை நிறுத்தம்..!

  • May 25, 2026 - 10:20 AM
  • 0 Comments

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான் நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22.05.2026) முதல் இடை நிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிரான விசாரணைகள் நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிருபர் பாறுக் ஷிஹான்

rain increase sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு..!

  • May 25, 2026 - 09:50 AM
  • 0 Comments

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நாடளாவிய ரீதியில் படிப்படியாக நிலைபெற்று வருவதன் காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில […]

vithiya case prison suicide | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சிறைச்சாலையில் தற்கொலை..!

  • May 25, 2026 - 09:42 AM
  • 0 Comments

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர் நேற்று (24.05.2026) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் […]

traditional games festival | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிவதொண்டர் திருக்கூட்டத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு விழா..!

  • May 25, 2026 - 09:33 AM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட சிவதொண்டர் திருக்கூட்டத்தின் அனுசரணையுடன் கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயம் மற்றும் கரடியனாறு பிரதேசத்திலுள்ள ஆலயங்களின் ஏற்பாட்டில் அறநெறிப் பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்களின் வருகையினை அதிகரிக்கும் நோக்கிலும் பாரம்பரிய கலாசாரப் போட்டிகளை ஊக்குவிக்கும் முகமாகவும் கரடியனாறு பிரதேசத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகளை ஒன்றிணைத்து நடாத்திய பாரம்பரிய கலாசார விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (24.05.2026) கரடியனாறு சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கரடியனாறு சித்திவிநாயகர் ஆலயப் […]

sri lanka landslide alert | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பல இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

  • May 22, 2026 - 11:44 AM
  • 0 Comments

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்று (22.05.2026) காலை 9 மணிக்கு வௌியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அனர்த்தங்கள் காரணமாக […]

mullaitivu disability sports | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது..!

  • May 22, 2026 - 11:31 AM
  • 0 Comments

சமூக சேவைகள் திணைக்களமும் (மத்திய) முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி நேற்றைய தினம்(21) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து சமூக சேவை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் முன்நூற்றி ஐம்பது பேர் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் உடல் உள ஆரோக்கியத்தைப் பேணிடவும் திறமையானவர்களை இனங்கண்டு மாகாண மற்றும் […]

kelani river warning | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

களனி கங்கையை அருகில் வாழ்வோருக்கு எச்சரிக்கை..!

  • May 22, 2026 - 11:20 AM
  • 0 Comments

களனி கங்கையை சூழவுள்ள பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்காலப்பகுதிக்குள் ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, தெஹிஓவிட்ட, எஹலியகொட, எட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய ஆகிய பகுதிகளைச் சூழவுள்ள இடங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. களனி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் தற்போது 300 மில்லிமீட்டரை நெருங்கிய கணிசமான […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊