minister visits jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழிற்கு விஜயம் செய்த மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்..!

  • Jun 8, 2026 - 09:55 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம்(07.06.2026) ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் “பெண்கள் சந்திப்பு” நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன் போது பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. முன்னதாக பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து மதியம் மல்லாகம் கல்லாரை வளர்மதி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து […]

rainy weather continues | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றும் மழையுடனான வானிலை தொடரும்..!

  • Jun 8, 2026 - 09:48 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அதேநேரம், அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் […]

police custody death probe | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு..!

  • Jun 8, 2026 - 09:44 AM
  • 0 Comments

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் உள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படும் சிறைக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 119 இலக்க முறைப்பாட்டிற்கமைய குடும்பப் பிரச்சினை தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார். குறித்த உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் […]

sritharan letter president | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்…!

  • Jun 8, 2026 - 09:26 AM
  • 0 Comments

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள உதயநகர் மேற்கு, கிளிநொச்சியை நிரந்தர முகவரியாகக் கொண்ட சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அவர்களின் விடுதலை தொடர்பான விடயத்தினை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன். தனது இனத்தின் […]

chavakachcheri tree planting | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சாவகச்சேரியில் மரநடுகை..!

  • Jun 5, 2026 - 04:04 PM
  • 0 Comments

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2026 வெள்ளிக்கிழமை தென்மராட்சி அபிவிருத்திக் கழகமும் (Thenmaradchi Development Association) கிரீன் குளோப் (Green Globe) அமைப்பும் இணைந்து சாவகச்சேரி நகர சபையுடன் கைகோர்த்து இன்று(05.06.2026) காலை 6.30மணிக்கு தனங்கிளப்பு வீதி, கண்ணாடிப்பிட்டி இந்து மயானம் ஆகிய பகுதிகளில் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வு சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஸ் தலைமையில் , உபதவிசாளர் ஞா.கிசோர் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் என்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் Dr. […]

litro price update | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம்; வெளியான தகவல்..!

  • Jun 5, 2026 - 12:04 PM
  • 0 Comments

ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் இன்று (05.06.2026) அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ (Litro) நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்த்தப்பட்ட போதிலும், லிட்ரோ நிறுவனம் விலையில் எவ்வித மாற்றமும் செய்யாதிருக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

rupee value drop | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை ரூபாயின் பெறுமதி மறுபடியும் வீழ்ச்சி..!

  • Jun 5, 2026 - 12:00 PM
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியான வீழ்ச்சியினை இன்றும் (05.06.2026) பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.27 ரூபாயாக காணப்படுகின்றது. அதேநேரம் அதன் விற்பனை விலை 342 ரூபாவாக அமைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

mullaitivu environment day | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிப்பு..!

  • Jun 5, 2026 - 11:51 AM
  • 0 Comments

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (2026.06.05) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் “பசுமை அலுவலகம் – பசுமை சமூகம்” என்ற கருப்பொருளின் கீழ் விசேட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, காலை 9.00 மணிக்கு தேசியக் கொடியேற்றுதல் மற்றும் தேசிய கீதம் இசைத்தலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பசுமை அலுவலக உறுதிமொழி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வுறுதிமொழியின் ஊடாக தூய்மையான, பசுமையான மற்றும் […]

colombo water supply issue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் கோளாறு..!

  • Jun 5, 2026 - 11:42 AM
  • 0 Comments

கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயிலேயே இந்த திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று (05.06.2026) இரவு 8.00 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர […]

pon sivakumaran remembrance | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்..!

  • Jun 5, 2026 - 11:37 AM
  • 0 Comments

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(05.06.2026) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.  

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊