உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிப்பு..!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (2026.06.05) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் “பசுமை அலுவலகம் – பசுமை சமூகம்” என்ற கருப்பொருளின் கீழ் விசேட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, காலை 9.00 மணிக்கு தேசியக் கொடியேற்றுதல் மற்றும் தேசிய கீதம் இசைத்தலுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து பசுமை அலுவலக உறுதிமொழி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வுறுதிமொழியின் ஊடாக தூய்மையான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான அலுவலகச் சூழலைப் பராமரித்தல், கழிவுகளை உருவாகும் இடத்திலேயே குறைத்து மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளின் பயன்பாட்டைக் குறைத்தல், வளங்களைப் பொறுப்புடனும் திறமையுடனும் பயன்படுத்துதல், எண்ணிம நடைமுறைகள் மற்றும் காகிதச் சேமிப்பு முயற்சிகளை ஊக்குவித்தல், 5S கொள்கைகளைப் பின்பற்றி ஒழுங்கமைக்கப்பட்ட பணியிடங்களை உருவாக்குதல் ஆகியவற்றுடன் மரநடுகை, பல்லுயிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் தூய்மையான இலங்கைத் திட்டம் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான அர்ப்பணிப்பும் மீளுறுதிப்படுத்தப்பட்டது.

உறுதிமொழியின் நிறைவாக,
“இன்று, உலக சுற்றுச்சூழல் தினத்தில், இயற்கையைப் பாதுகாக்கவும், வளங்களைப் பேணவும், மாசைக் குறைக்கவும், வருங்கால சந்ததியினருக்காகத் தூய்மையான, பசுமையான மற்றும் மேலும் நிலையான முல்லைத்தீவைக் கட்டியெழுப்பவும் நாங்கள் நம்மை அர்ப்பணிக்கிறோம்”
என்ற உறுதிப்பாடும் அனைவராலும் வெளிப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் அவர்கள் உரையாற்றியதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒருநாள் நிகழ்வாக அல்லாது அன்றாட நிர்வாக மற்றும் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக அமைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும், பசுமை அலுவலகக் கருத்தாக்கத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரச சேவையை மேலும் நிலையானதும் மக்கள் நட்பானதுமானதாக மாற்றுவதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து பசுமை அலுவலக விழிப்புணர்வுப் பலகை திறந்து வைக்கப்பட்டதுடன், அலுவலக வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது. இந்நடவடிக்கைகள் மூலம் பசுமையான அலுவலகச் சூழல் உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கம் வலுப்படுத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சி. ரஜனிக்காந்தன் அவர்களுக்கு சுற்றுப்புறச் சூழல் தொடர்பான தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்பான பங்களிப்பினைப் பாராட்டி விசேட மெச்சுரைப் பாராட்டுச் சான்றிதழ் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இப்பாராட்டு, பசுமை அலுவலகக் கருத்தாக்கத்தை முன்னெடுத்து சுற்றுச்சூழல் நட்பு செயற்பாடுகளை ஊக்குவித்த அவரது அர்ப்பணிப்பையும் சேவையையும் பாராட்டும் வகையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் அனைத்து பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் பசுமையான சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு தங்களது ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தினர்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp