புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சாவகச்சேரியில் மரநடுகை..!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2026 வெள்ளிக்கிழமை தென்மராட்சி அபிவிருத்திக் கழகமும் (Thenmaradchi Development Association) கிரீன் குளோப் (Green Globe) அமைப்பும் இணைந்து சாவகச்சேரி நகர சபையுடன் கைகோர்த்து இன்று(05.06.2026) காலை 6.30மணிக்கு தனங்கிளப்பு வீதி, கண்ணாடிப்பிட்டி இந்து மயானம் ஆகிய பகுதிகளில் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது.

இந்த சிறப்பு நிகழ்வு சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஸ் தலைமையில் , உபதவிசாளர் ஞா.கிசோர் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் என்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் Dr. S. சசிகரன் , பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர் Dr. S. செல்வகணேஸ் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் நிகழ்வில் தென்மராட்சி அபிவிருத்திக் கழக தலைவர் திரு அ. கயிலாயப்பிள்ளை, நிர்வாகத்தினர் மற்றும் கிரீன் குளோப் அமைப்பினர், தென்மராட்சியின் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நடுகை நிகழ்வுக்கான மரங்களை Dr. S. சசிகரன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp