ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் இன்று (05.06.2026) அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ (Litro) நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாதாந்த எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்த்தப்பட்ட போதிலும், லிட்ரோ நிறுவனம் விலையில் எவ்வித மாற்றமும் செய்யாதிருக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

