பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து பல கோடி மோசடி செய்த மூவர் சிக்கினர்..!
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, மூன்று வருடங்களுக்கும் மேலாக நாட்டின் 15 பொலிஸ் பிரிவுகளில் உள்ள மக்களை ஏமாற்றி, பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கம், பணம் மற்றும் சொத்துக்களை மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் மூவரும் உடுநுவர, தவுலகல பகுதியைச் சேர்ந்தவர்களாவர். 40, […]









