dengue cases near 70000 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

70,000-ஐ நெருங்கிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!

  • Jul 14, 2026 - 09:47 AM
  • 0 Comments

நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (13) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 69,951 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கடந்த 12 ஆம் திகதி வரை பதிவாகியிருந்த மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,672 ஆகும் என்பதுடன், நேற்று (13) ஒரு நாளில் மாத்திரம் 1,279 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். […]

crude oil prices rise again | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மறுபடியும் எகிறிய கச்சாய் எண்ணெய் விலை..!

  • Jul 14, 2026 - 09:43 AM
  • 0 Comments

மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9% இற்கும் அதிகமான அளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 7.29 டொலர்கள் அல்லது 9.59% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 83.30 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் விலை 6.73 டொலர்கள் அல்லது 9.42% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 78.14 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. […]

foreign woman arrested with 6kg kush drugs | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வௌிநாட்டு பெண் 6 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது..!

  • Jul 14, 2026 - 09:39 AM
  • 0 Comments

6 கிலோ 180 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (14) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த போதைப்பொருளுடன் 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண்ணிடம் பொலிஸ் போதைப்பொருள் […]

iran attacks oil tankers | Pathivu News உள்ளூர் உலகம் புதியவை முக்கிய செய்திகள்

எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்..!

  • Jul 14, 2026 - 09:35 AM
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது ஈரான் நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில், இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்த எண்மரில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களில் அறுவர் இந்தியப் பிரஜைகள் என்பதுடன் இருவர் உக்ரைன் பிரஜைகள் எனவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் குறிப்பிட்டுள்ளது. ‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பஹியா’ (Al Bahia) ஆகிய இரு […]

dengue control needs awareness action | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

டெங்குநோயை கட்டுப்படுத்த விழிப்புணர்வும் தொடர் செயற்பாடுகளும் அவசியம்..!

  • Jul 14, 2026 - 09:31 AM
  • 0 Comments

ஆ.ஜென்சன் றொனால்ட். MSc. மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர். டெங்கு நோய் இன்று இலங்கையில் பொதுச் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் டெங்கு நோயால் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என வயது வேறுபாடின்றி அனைவரையும் இது தாக்கக்கூடியது. சிலருக்கு சாதாரண காய்ச்சலாகக் காணப்பட்டாலும், சிலருக்கு உயிருக்கு ஆபத்தான டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever) அல்லது டெங்கு அதிர்ச்சி நிலை (Dengue Shock Syndrome) ஏற்படலாம். […]

sri lanka weather today 12 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • Jul 14, 2026 - 09:27 AM
  • 0 Comments

14.07.2026 சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு […]

chicken sold near toilet area in vavuniya | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியாவில் மலசலக்கூடப் பகுதியில் கோழி இறைச்சி வியாபாரம்..!

  • Jul 13, 2026 - 03:40 PM
  • 0 Comments

வவுனியா புகையிரத நிலைய வீதியில் நிலையத்தினை அண்மித்த பகுதியில் சுகாதார சீர்கேட்டின் உச்சக் கட்டமாக, மலசலக்கூடப் பகுதிக்கு மிக அருகில் கோழிகளை வளர்த்து, இறைச்சியாக்கி மக்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவரின் கடை அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இத்தகைய செயல்கள், பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1775798896937224

special london meeting on northern education and economic development | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடபகுதியில் கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் லண்டனில் விசேட சந்திப்பு..!

  • Jul 13, 2026 - 03:35 PM
  • 0 Comments

இலங்கையினுடைய வடபகுதியின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருடனான சந்திப்பு ஒன்று லண்டனில் இடம்பெறவுள்ளது. அரும்பு கல்வி மேம்பாட்டு மையத்தின் நிறுவுனர் திரு. ந.சச்சிதானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வானது, ஜுலை 14, செவ்வாய்க்கிழமை ​மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை லண்டன் ஹைகேட்ஹில் முருகன் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது. ​ இந்தச் சந்திப்பின் போது இலங்கையினுடைய வட மாகாணத்தின் கல்வி மற்றும் அபிவிருத்தி சார்ந்த பல விடயங்கள் […]

wimal weerawansa case postponed again | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விமல்வீரவங்சவுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு..!

  • Jul 13, 2026 - 03:30 PM
  • 0 Comments

2016 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இன்று (13) அழைக்கப்பட்டது. இதன்போது பிரதிவாதியான […]

equal opportunities for children with special needs | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சமமான வாய்ப்பு..!

  • Jul 13, 2026 - 03:26 PM
  • 0 Comments

விசேட தேவையுடைய பிள்ளைகள், ஆட்டிசம் (Autism) மற்றும் ஏனைய நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள், சாதாரண முன்பள்ளிப் பிள்ளைகளுடன் இணைந்து கற்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதனைத் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், விசேட தேவையுடைய பிள்ளைகளைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, அவர்களுக்குத் தனித்தனியாகக் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊