விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சமமான வாய்ப்பு..!
விசேட தேவையுடைய பிள்ளைகள், ஆட்டிசம் (Autism) மற்றும் ஏனைய நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள், சாதாரண முன்பள்ளிப் பிள்ளைகளுடன் இணைந்து கற்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதனைத் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், விசேட தேவையுடைய பிள்ளைகளைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, அவர்களுக்குத் தனித்தனியாகக் […]









