விழாக்கோலம் காண்கிறது யாழ் நல்லூர்..!
வரலாறு பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பெருவிழா 17.08.2026ஆம் திகதி ஆரம்பம்.
வரலாறு பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பெருவிழா 17.08.2026ஆம் திகதி ஆரம்பம்.
வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவாக உள்ளதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற காணி உரித்துச் சான்றிதழ் வழங்கல் திட்டத்தின் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், பயிற்சிப் பட்டறை நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், நடைபெற்றது. பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே மாவட்ட செயலர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் வெற்றிகரமாக […]
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிராம சேவகர் பிரிவுக்கு தலா வீடு என்ற அடிப்படையில் தமக்கானதோர் இடம் அழகான வாழ்க்கை என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டு வேலைகளை அரசியல் பேரவை உறுப்பினரும் கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா நேரில் கள விஜயம் செய்து பார்வையிட்டார். இதற்கான வேலைகளின் தற்போதைய […]
யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில் காளி கோவிலடி பகுதியை சேர்ந்த கோவிந்தராசா ஜனுசன் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை 20 ஆண்டுகளாகியும் நீதி மறுக்கப்பட்ட மனிதாபிமானப் பேரவலம் “மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக மூதூர் ACF படுகொலை உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இருபது ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை.” 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று, திருகோணமலை மாவட்டத்தின் மூதூரில், பிரெஞ்சு மனிதாபிமான அமைப்பான Action Contre la Faim (ACF) / Action Against […]
நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05.07.2026) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. நிலவும் மழைக்கால வானிலையுடன் பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் […]
பாறைச் சரிவு காரணமாக கடுன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று (03.08.2026) நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுன்னாவ பகுதியில் பாறைச் சரிவு ஏற்பட்டதுடன், இதன் காரணமாக கணேதென்ன மற்றும் கடுன்னாவ இடையிலான வீதிப் பகுதியை தற்காலிகமாக மூட பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்பின்னர் வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக […]
04.08.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா […]
கிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் இன்று பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வீதியில் நின்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது, அதே திசையில் பின்னால் வந்த ‘ஹயஸ்’ (HiAce) ரக வாகனம் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் பாரிய காயங்களுக்குள்ளான அப்பெண், உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பூ.லின்ரன் வடமராட்சி பச்சிளைப்பள்ளி […]
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில் இன்று (03.08.2026) எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள், குளக்கரைக்கு அருகே சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக கிளிநொச்சி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த நபர் யார், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் […]