உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் 04ம் நாள் தாயக செயலணியின் ஏற்பாட்டில் கிரானில் அனுஸ்டிப்பு..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17ம்
ஆண்டு நிறைவை அனுஸ்டிக்கும் முகமாக தாயக செயலணியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் 04ம் நாளான இன்று மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் முன்னெடுக்கப்பட்டது.

தாயக செயலணியின் கிரான் பிரதேச இணைப்பாளர் அரவிந்தன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சுதாகரன், தாயக செயலணியின் இணைப்பாளர் செல்வகுமார் உள்ளிட்ட மதகுரு, பிரதேச சபை உறுப்பினர்கள், தாயக செயலணி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முகமாக ஈகைச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது மக்கள் தங்கள் உயிர்காக்க அருந்திய கஞ்சியினை நினைவூட்டும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பொதுமக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை