kumudini remembrance | Pathivu News ஈழம் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குமுதினிப் படுகொலை நினைவுநாள்..!

  • May 15, 2026 - 04:00 PM
  • 0 Comments

15.05.1985 யாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தார்கள். நெடுந்தீவில் வாழும் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கடல் கடந்து படகுகளில் யாழ் நகருக்கு வரவேண்டியதால் அவர்கள் நாளாந்தம் தமது தேவைகளை நிறைவேற்றப் படகுகளில் பிரயாணம் செய்வது தவிர்க்க முடியாத விடயமாக அமைந்தது. நெடுந்தீவு மக்களின் கடற் போக்குவரத்திற்கு […]

jaffna teachers protest rain | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்..!

  • May 15, 2026 - 02:30 PM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று (15.05.2026) கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன் கருத்து தெரிவிக்கையில், வடமாகாண கல்வியை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் கல்வி அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இடமாற்றச் சபையை மீறி தாங்கள் கட்சிகளுக்கு சார்பானவர்கள் மற்றும் […]

provincial election this year | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த !தயார்..

  • May 15, 2026 - 01:40 PM
  • 0 Comments

இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (15.05.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அரசாங்கம் அதில் எவ்வித […]

no land police powers transfer | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தரவே முடியாது – பெரமுனா திட்டவட்டம்..!

  • May 15, 2026 - 01:09 PM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரப் பகிர்விலேயே எமக்கு உடன்பாடு உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் கூறினார். மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு […]

ampara fuel queue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறையில் மீண்டும் எரிபொருள் வரிசை ஆரம்பம்..!

  • May 15, 2026 - 12:50 PM
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் மாலை முதல் காலை வரை நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றது. சில பகுதிகளில் நேற்று இரவு (14.05.2026) மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு நீண்ட வரிசைகள் காணப்பட்டன. தற்போது எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் […]

imf price conditions update | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மின்சாரம், எரிபொருள் விலையில் நிபந்தனை நிறைவேற்றம் ; IMF வெளியிட்ட முக்கிய தகவல்..!

  • May 15, 2026 - 12:26 PM
  • 0 Comments

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜுலி கோசாக் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதை உறுதிப்படுத்தினார். எனினும், நிறைவேற்றுச் சபையின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்னர் இலங்கை […]

red alert sri lanka 2 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

  • May 15, 2026 - 12:13 PM
  • 0 Comments

பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15.05.2026) காலை 9.30 மணிக்கு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதுடன், இது அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு அப்பால் நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் […]

sand mixed fish sale | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் மணல் கலந்த மீன்கள் விற்பனை-சட்ட நடவடிக்கைக்கு கோரிக்கை..!

  • May 15, 2026 - 10:47 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத வகையில் அழுகிய மணல் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு , பிரதேசங்களில் உள்ள பொதுச் சந்தைகள் மற்றும் நடமாடும் மீன் விற்பனை வியாபாரிகள் குறித்த மீன்களை புதிதாக காட்டுவதற்காகவும் நிறையை மோசடி செய்வதற்காகவும் மண் கலப்படம் செய்து விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதில் கிரீ மீன் பாரைக்குட்டி மீன் […]

flood alert sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் சில பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை..!

  • May 15, 2026 - 10:40 AM
  • 0 Comments

களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (15.05.2026) முற்பகல் 8:00 மணிக்கு அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடா கங்கை உப-பள்ளத்தாக்கின் மேல்நிலைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு, தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, ஆற்று நீர்மட்ட அளவீடுகள் மற்றும் மழைவீழ்ச்சி தரவுகளின் பகுப்பாய்வுகளின்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர […]

bad weather impact | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – இருவர் உயிரிழப்பு ; 3500 பேர் பாதிப்பு..!

  • May 15, 2026 - 10:33 AM
  • 0 Comments

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் சீரற்ற வானிலை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் யாழில் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும் 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp