mahindas eldest son appears before fcid | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மகிந்தவின் மூத்த பொடியன் FCID யில் முன்னிலை..!

  • Aug 21, 2026 - 10:51 AM
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (21.08.2026) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக, அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமையவே நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

new air conditioned ferry for delft island rs 235 million allocated | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு-235 மில்லியன் ரூபா ஒதுக்கீடு..!

  • Aug 21, 2026 - 10:49 AM
  • 0 Comments

சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் எம்.ஏ.எல்.எஸ்.என்.கே. சம்பத் மந்திரிநாயக்க ஆகியோர் நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில், கடற்றொழில், அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், நெடுந்தீவு […]

racist allegations against kalmunai hospital over dress code unfounded | Pathivu News முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

ஆடை கட்டுப்பாடு தொடர்பில் கல்முனை வைத்தியசாலை நிர்வாகம் மீது சுமத்தப்படும் இனவாதக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை..!

  • Aug 21, 2026 - 09:55 AM
  • 0 Comments

கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை தெளிவுபடுத்தியுள்ளது. விசேட செய்தியாளர் சந்திப்பில் அமைப்பின் பிரதிநிதிகளான தா.பிரதீபன், மு.பிரகாஷ், நாகராஜா சனாதனன் மற்றும் சி.திலோஜன் ஆகியோர் கலந்துகொண்டு இத் தெளிவூட்டலை வழங்கினர். காணொளி இணைப்பு: 3https://www.facebook.com/reel/4014549005513339

namals slams govt move to raise judges retirement age | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தும் அரசின் நகர்வு ; நாமல் கடும் குற்றச்சாட்டு..!

  • Aug 21, 2026 - 09:52 AM
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவு, நீதித்துறை மீதான செல்வாக்கை அதிகரிப்பதற்கும், தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியாக இருக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அரசாங்கம் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், நீதிமன்ற நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்துவதற்குமே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவர முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), ஐக்கிய […]

police clearance database system failure | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுக் கட்டமைப்பு செயலிழப்பு..!

  • Aug 21, 2026 - 09:50 AM
  • 0 Comments

பொலிஸ் தலைமையகத்தினால் விநியோகிக்கப்படும் நற்சான்றிதழ்கள் தொடர்பான தரவுக் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவினால் இந்தச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதுடன், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது, அறிக்கைகளைக் கோருவது மற்றும் சான்றிதழ்களை அச்சிடுவது ஆகியன குறித்த தரவுக் கட்டமைப்பின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன. எவ்வாறாயினும், அந்தத் தரவுக் கட்டமைப்பானது நேற்று (20) பகல் 12.50 மணி முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகிறது. இந்தக் கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவருவதற்காக […]

five killed in early morning horror crash | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் சாவு..!

  • Aug 21, 2026 - 09:48 AM
  • 0 Comments

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21.08.2026) அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தொன்றில் ஐந்து பேர் சாவடைந்துள்ளனர். வெல்லவாய – மொனராகலை வீதியின் கும்புக்கன, களு பாலத்தில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியொன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த 10 பேரில் எட்டுப் பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஐந்து பேர் […]

afternoon thunderstorms in sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை..!

  • Aug 21, 2026 - 09:45 AM
  • 0 Comments

21.06.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், […]

20 years since father jim browns forced disappearance | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஜிம் பிறவுண் அடிகளார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 20 வருடங்கள்..!

  • Aug 20, 2026 - 11:08 AM
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட திருச்செல்வம் நிகல் ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த கோரி பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கத் திருத்தந்தையான ஜிம் பிறவுண் அடிகளார் அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரி தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்த காலப்பகுதியில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தனது உதவியாளரான வின்சன் விமலதாஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , அல்லைப்பிட்டி கடற்படை முகாமை அண்மித்த […]

indictments filed against karannagoda and yoshitha | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கரன்னாகொட மற்றும் யோஷிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்..!

  • Aug 20, 2026 - 10:30 AM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு இன்று (20.08.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன. இதனையடுத்து, குறித்த பிரதிவாதிகள் இருவரையும் பிணையில் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

public health inspectors withdraw from dengue control duties | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து விலகிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்..!

  • Aug 20, 2026 - 09:59 AM
  • 0 Comments

இன்று (20.08.2026) முதல் நாடு தழுவிய ரீதியில் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டுக் கடமைகளில் இருந்தும் விலகுவதற்கு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரியை தன்னிச்சையாக இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (19.08.2026) இரவு கூடிய தமது சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துக்குட குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக, நாளை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊