mp sanakiyan joins valikamam north land protest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வலிவடக்கு காணி விடுவிப்பு போராட்டத்தில் சாணக்கியன் எம்.பி..!

  • Aug 24, 2026 - 10:28 AM
  • 0 Comments

  யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலி சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் , நாடாளுமன்ற […]

sakila appointed child care commissioner | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிறுவர் பராமரிப்புத்துறை பராமரிப்புத்திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா..!

  • Aug 24, 2026 - 10:21 AM
  • 0 Comments

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய சுஜீவா சிவதாஸ் மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவிக்கான புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் […]

body washes ashore at karainagar beach | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்..!

  • Aug 24, 2026 - 10:19 AM
  • 0 Comments

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று (24.08.2026) கரையொதுங்கியது கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

vas aradhana events at akkaraipattu temple | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அக்கரைப்பற்று விஜயராம விகாரையில் வசா கால சிறப்பு தர்மபோதனை மற்றும் பௌத்த பூஜை நிகழ்வுகள்..!

  • Aug 24, 2026 - 10:17 AM
  • 0 Comments

அக்கரைப்பற்று: அக்கரைப்பற்று விஜயராம மகா விகாரையில் 2026ஆம் ஆண்டின் வசா கால நிகழ்வுகளை முன்னிட்டு சிறப்பு பௌத்த பூஜை வழிபாடுகளும் தர்மபோதனையும் நேற்று (23.08.2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. ஹிங்குரான பிரிவெனாதிபதி ஸ்ரீ தம்ம ரத்ன தேரர் மற்றும் ஸ்ரீ விஜயராம மகா விகாராதிபதி தேவகொட சோரத்த தேரர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. விஜயராம விகாரையில் அமைந்துள்ள போதி மரத்திற்கு சிறப்பு பௌத்த பூஜை மற்றும் வழிபாடுகள் இடம்பெற்றதுடன், வசா கால நிகழ்வின் ஒரு பகுதியாக தர்மபோதனையும் […]

over 81000 affected by el nino | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் எல்நினோ தாக்கத்தினால் பாதிப்பு..!

  • Aug 24, 2026 - 10:15 AM
  • 0 Comments

எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் எல் நினோ நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்கத்தின் காரணமாக 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீரை விநியோகிக்கவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக, […]

public health inspectors strike | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் தொழிற்சங்க போராட்டத்தில்..!

  • Aug 24, 2026 - 10:13 AM
  • 0 Comments

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24.08.2026) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையினால், பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்தச் சிக்கல் குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை […]

sri lanka weather today 25 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Aug 24, 2026 - 10:11 AM
  • 0 Comments

24.08.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் […]

president orders fast tracking of land release | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

காணி விடுப்பை விரைவுபடுத்த ஜனாதிபதி உத்தரவு..!

  • Aug 21, 2026 - 11:26 AM
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகளை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவித்து, வழங்குவதை விரைவுபடுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் […]

two police officers arrested for taking bribes | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது..!

  • Aug 21, 2026 - 11:00 AM
  • 0 Comments

20,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஒகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்காக இலஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றுக்கொண்டமை தொடர்பிலேயே, இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபரிடம் இருந்த […]

luxury cruise ship departs jaffna for chennai | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சொகுசு கப்பல்..!

  • Aug 21, 2026 - 10:56 AM
  • 0 Comments

இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. 862 சுற்றுலாப் பயணிகளுடன் வருகை தந்த குறித்த கப்பல், இன்றைய தினம் காலை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டுள்ளது. இக்கப்பலில் லண்டன், இந்தியா, ஜேர்மனி, மொரீஷியஸ், அமெரிக்கா மற்றும் இலங்கை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊