உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வலி வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 37 ஆண்டுகள்; மீள்குடியேற்ற கோரி போராட்டம்..!

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள் முன்னெடுக்கவுள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஜூன் 15ஆம் திகதி , அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு 37 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

யுத்தம் நிறைவடைந்து 17ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள் குடியேற அனுமதிக்காது, அப்பகுதி மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தமது காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி , தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக , மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக்குழு அறிவித்துள்ளது.

தமது போராட்டத்திற்கு கட்சி பேதங்கள் இன்றி , அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp