arundika fernando at cid | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தில்..!

  • Sep 3, 2026 - 10:44 AM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும், அண்மையில் டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அருந்திக பெர்னாண்டோவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் இதன்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

sri lanka faces coal shortage | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் நிலக்கரி பற்றாக்குறை..! வலுசக்தி அமைச்சரின் அறிவிப்பு

  • Sep 3, 2026 - 10:42 AM
  • 0 Comments

நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைக்கப்பட்ட போதிலும், போதுமான அளவு நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகத்திற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நிலக்கரி இருப்பு குறைவடைந்துள்ளதையடுத்து நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். இரண்டு நிலக்கரி கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதுடன், அவற்றில் முதலாவது கப்பல் நாளை (04) வந்தடையவுள்ளது. மற்றைய கப்பல் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டை […]

water cut in colombo areas today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு..!

  • Sep 3, 2026 - 10:03 AM
  • 0 Comments

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03.09.2026) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04.09.2026) இரவு 8.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய நுகேகொடை, கொஹுவலை, […]

good news for seniors | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

முதியோர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி..!

  • Sep 3, 2026 - 10:01 AM
  • 0 Comments

2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு இன்று (03.09.2026) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது. உரிய பயனாளிகள் இன்று (03.09.2026) முதல் தங்களுக்கான […]

jaffna students scholarship exam achievement | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் செய்த சாதனை..!

  • Sep 3, 2026 - 09:42 AM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர், தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேநேரம் சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியது. 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர […]

sri lanka thunderstorms today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று இடியுடன் கூடிய மழை..!

  • Sep 3, 2026 - 09:40 AM
  • 0 Comments

03.09.2026 இன்று முதல் அடுத்த சில நாட்களில், நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது […]

2 year old boy dies by drowning | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு..!

  • Sep 2, 2026 - 10:56 AM
  • 0 Comments

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான குழந்தையே வாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நேற்று (02.09.2026 ) காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் […]

jaffna calls for hunger strike on 12th | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் 12 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு..!

  • Sep 2, 2026 - 10:12 AM
  • 0 Comments

அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கம் பதவி ஏற்று 2 வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் காணி விடுவிப்பு, […]

crude oil price surpasses 96 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கச்சா எண்ணெய் விலை 96 அமெரிக்க டொலர்களை தாண்டியது..!

  • Sep 2, 2026 - 10:09 AM
  • 0 Comments

2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2.19% உயர்ந்து, பெரல் ஒன்றுக்கு $ 96.13 டொலரை எட்டியுள்ளது. இது முந்தைய விலை விட 1.96% அதிகமாகும். மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றம், ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் […]

jaffna university appointment irregularity | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழக நியமனத்தில் முறைகேடு..!

  • Sep 2, 2026 - 10:05 AM
  • 0 Comments

யாழ். பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது விடயம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட ஊழியர்கள் – யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக அங்கு தற்காலிகமாக பணியாற்றிவந்த தாம் உள்ளிட்ட 400 […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊