முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு..!
இலங்கையில் முந்திய குழந்தை பருவ (முன்பள்ளி) சிறுவர்களின் டிஜிட்டல் திரை (Screen Time) பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, முந்திய குழந்தை பருவத்திலுள்ள சிறுவர்களில் 64 சதவீதமானோர் தினமும் அரை மணித்தியாலத்திற்கு அதிகமான நேரத்தை கைபேசிகள் அல்லது கணினிகளைப் பார்ப்பதில் செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின்படி, சிறுவர் ஒருவர் தினமும் அரை மணித்தியாலத்திற்கும் குறைவான நேரமே டிஜிட்டல் […]









