kilinochchi lake death | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு..!

  • Apr 27, 2026 - 02:33 PM
  • 0 Comments

கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளத்தில் நேற்று (26.04.2026) பிற்பகல் மூவர் நீராடியுள்ளனர். இதன்போது, ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணி நேற்று மாலை முதல் இடம்பெற்று வந்த நிலையில், இன்று (27.04.2026) காலை 8.00 மணியளவில் இரணைமடு நன்னீர் மீனவர்களால் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இச்சம்பவத்தில் கிளிநொச்சி, ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

mp firearm threat arrest | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் – அருச்சுனா எம்.பி கைது..!

  • Apr 27, 2026 - 12:43 PM
  • 0 Comments

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக […]

chemmani excavation phase 3 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்..!

  • Apr 27, 2026 - 11:02 AM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக 08 […]

price gouging fine | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர் மற்றும் அரிசி, விற்றவர்களுக்கு அபராதம்..!

  • Apr 27, 2026 - 10:05 AM
  • 0 Comments

அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, கடந்த 24ஆம் திகதி கண்டி, திருகோணமலை, காலி, தங்காலை, கிராந்துருகோட்டை மற்றும் ஹப்புத்தளை ஆகிய பகுதிகளில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் இந்தத் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. கீரி சம்பா மற்றும் ஏனைய அரிசி வகைகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை இதன்போது கண்டறியப்பட்டது. இது […]

kattana heroin arrest | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஹெரோயினுடன் கட்டானை பகுதியில் ஒருவர் கைது..!

  • Apr 27, 2026 - 10:02 AM
  • 0 Comments

கட்டான, ஜயபிம பகுதியில் 52 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டான பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவராவார். கட்டான பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

sl weather today 3 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • Apr 27, 2026 - 09:57 AM
  • 0 Comments

27.04.2026 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் தென் மாகாணத்தின் சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அநுராதபுரம், […]

ministry website cyber attack | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்..!

  • Apr 24, 2026 - 05:17 PM
  • 0 Comments

பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சின் செயலாளரின் தலையீட்டுடன் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் மீது அண்மையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அதில் உள்ள தகவல்களை ஏலத்திற்கு விட்டு பணம் பெறுவதற்கு அந்த தரப்பினர் முற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதலினால் அமைச்சின் இணையத்தளத்தில் […]

pavement trade ban | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மாற்று இடம் வழங்கி நடைபாதை வியாபாரத்தை தடை செய்த மாநகரசபை..!

  • Apr 24, 2026 - 03:30 PM
  • 0 Comments

திருகோணமலை மட்டிக்களி பிரதான வீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட திருகோணமலை மாநகரசபை தடை விதித்துள்ளது. இன்றைய தினம் (24.04.2026) குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த முதல்வர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான மாற்றிடத்தை வழங்கியதுடன் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டனர். திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் மட்டிக்களி பகுதியில் வீதியில் வைத்து நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் சன நெரிசல் ஏற்படுவதாகவும் இதனால் விபத்துகளும் […]

cid statement ranil wife | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மனைவியிடம் CID வாக்குமூலம்..!

  • Apr 24, 2026 - 03:25 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (24.04.2026) வாக்குமூலம் பெற்றுள்ளது. அவரது இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

jayasundara request rejected | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கை நிராகரிப்பு..!

  • Apr 24, 2026 - 03:21 PM
  • 0 Comments

குற்றவாளி கூண்டிலிருந்து தாம் வழங்கிய வாக்குமூலத்தில் புதிய விடயங்களைச் சேர்க்க அனுமதிக்குமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (24.04.2026) நிராகரித்தது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாக கடமையை சரிவர நிறைவேற்றாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊