e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0ae85e0ae9fe0af88e0aeafe0aebee0aeb3 e0ae85e0ae9fe0af8de0ae9fe0af88 e0aeb5e0aebfe0aea8e0aebfe0aeaf | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு..!

  • Mar 30, 2026 - 11:12 AM
  • 0 Comments

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தடைப்பட்டிருந்த சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான விசேட அறிவித்தலை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் பத்தரமுல்ல பிரதான அலுவலகம் அல்லது மாகாண அலுவலகங்களுக்கு வருகை தந்து, கணினி கோளாறு காரணமாக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனவர்களுக்கு மாத்திரம் இன்று (30.03.2026) ஒருநாள் சேவையின் கீழ் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. நாளை (31.03.2026) முதல் பத்தரமுல்ல பிரதான அலுவலகம் […]

e0aeaee0aea4e0af8de0aea4e0aebfe0aeaf e0ae95e0aebfe0aeb4e0ae95e0af8de0ae95e0af81 e0aeaae0af8be0aeb0e0af8de0ae95e0af8de0ae95e0aeb3e0aea4 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கு போர்க்களத்தில் தமிழரின் தியாகம் ; உலகம் முழுவதும் அஞ்சலி..!

  • Mar 30, 2026 - 10:22 AM
  • 0 Comments

மத்திய கிழக்கு பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர் தொடர்ந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க இராணுவ வீரர் விசாகன் சத்தியமூர்த்தி மார்ச் 21ஆம் திகதி போர்க்களத்தில் உயிரிழந்துள்ளார். அமெரிக்க இராணுவத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த இவர், பல ஆண்டுகளாக சேவையாற்றிய அனுபவமுள்ள வீரராகக் கருதப்படுகிறார். மத்திய கிழக்கு போரில் உயிரிழந்த முதல் தமிழ் வம்சாவளி […]

e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaee0aebfe0aea9e0af8de0ae9ae0aebee0aeb0e0aea4e0af8de0aea4e0af88 e0ae9ae0aebfe0ae95e0af8de0ae95 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முன்வர வேண்டும்..!

  • Mar 30, 2026 - 10:19 AM
  • 0 Comments

தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார். மாலை 5 மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு […]

e0ae85e0aea4e0aebfe0ae95e0aeb0e0aebfe0aea4e0af8de0aea4e0aea4e0af81 e0aeaee0ae9ae0ae95e0af81 e0ae8ee0aea3e0af8de0aea3e0af86e0aeafe0aebf | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அதிகரித்தது மசகு எண்ணெயின் விலை..!

  • Mar 30, 2026 - 10:01 AM
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், இன்று (30.03.2026) ஆசிய சந்தைகள் திறக்கப்பட்டபோது சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஒரு பீப்பாய் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 115.84 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது, இது 2.9% அதிகரிப்பாகும். கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்னர், ஒரு பீப்பாய் எண்ணெய் சுமார் 72 அமெரிக்க டொலருக்கு வர்த்தகம் […]

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af8de0ae95e0af81 e0ae85e0aeb4e0af88e0aea4e0af8de0aea4e0af81e0aeb5e0aeb0e0aeaae0af8de0aeaae0ae9fe0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மிதிகம சூட்டி..!

  • Mar 30, 2026 - 09:42 AM
  • 0 Comments

ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று (30.03.2026) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று அதிகாலை 4.27 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சலாம் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் சந்தேகநபர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஓமான் பாதுகாப்புப் […]

e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0ae89e0aeb1e0af81e0aeaae0af8de0aeaae0aebfe0aea9e0aeb0e0af8d e0aeaee0af8a | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த மகிழுந்து விபத்து..!

  • Mar 30, 2026 - 09:31 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த மகிழுந்து, சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று(29.03.2026) இரவு 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே மகிழுந்தில் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் மகிழுந்து மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சிலாபம் […]

e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9f e0ae9ae0af86e0aeafe0aeb2e0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாவட்ட செயலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட பொலிசார்..!

  • Mar 27, 2026 - 10:15 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(27.03.2026) ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் இணை தலைமையுடன் நடைபெற்று வருகிறது. அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் , காணி […]

e0aea4e0aebfe0aeb0e0af81e0ae95e0af8be0aea3e0aeaee0aeb2e0af88 e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9f e0aeb5e0aebfe0aeb2e0af88 e0aea8 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்ட விலை நிர்ணயக்குழு கூட்டம்..!

  • Mar 27, 2026 - 09:52 AM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவ்வாண்டிற்கான மாவட்ட விலை நிர்ணயக் குழுக் கூட்டம் நேற்று (26) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தொழிலாளர் ஊதியம், கட்டுமானப் பொருட்களின் விலைகள் போக்குவரத்து, மற்றும் இயந்திர வாடகை, மாமிச உணவுப் பொருட்களின் உச்ச வரம்பு விலை தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் மேற்கண்ட பிரிவுகளுக்கான தற்போதைய விலை நிலவரங்கள், […]

e0ae88e0aeb0e0aebee0aea9e0aebfe0aeaf e0ae8ee0aeb0e0aebfe0ae9ae0ae95e0af8de0aea4e0aebf e0ae86e0aeb2e0af88e0ae95e0aeb3e0af8d e0aeae | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈரானிய எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதை அமெரிக்கா நீட்டிக்கும்..!

  • Mar 27, 2026 - 09:42 AM
  • 0 Comments

மின் உற்பத்தி நிலையங்களை அழிக்கும் காலகட்டத்தை 10 நாட்களுக்கு ஏப்ரல் 6 வரை அமெரிக்கா இடைநிறுத்தும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மிகவும் சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாகவும் டிரம்ப் எழுதியிருந்தார். 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல தெஹ்ரான் அனுமதிக்காவிட்டால், […]

e0ae85e0ae95e0af8de0ae95e0aeb0e0af88e0aeaae0af8de0aeaae0aeb1e0af8de0aeb1e0aebfe0aeb2e0af8d e0ae87e0aeb2e0ae9ee0af8de0ae9ae0aeaee0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அக்கரைப்பற்றில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் சார்ஜன்ட் கைது..!

  • Mar 27, 2026 - 09:24 AM
  • 0 Comments

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர், 4,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றபோது நேற்று (26.03.2026) காலை கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் இருந்து அவரது தாய் விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக ‘119’ அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார். […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp