உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த மகிழுந்து விபத்து..!

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த மகிழுந்து, சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று(29.03.2026) இரவு 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே மகிழுந்தில் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் மகிழுந்து மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சிலாபம் காால்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்