செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தொடரூந்துடன் மோதி யானை உயிரிழப்பு..!

  • Feb 17, 2026 - 01:52 PM
  • 0 Comments

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலக்கம் 943 தபால் ரயில், இன்று (17.02.2026) அதிகாலை கித்துல்உத்துவ 151ஆவது மைல்கல் அருகே காட்டு யானையுடன் மோதி தடம் புரண்டது. இந்த விபத்தில் காட்டு யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. காட்டு யானை தொடரூந்தின் இயந்திரத்தில் மோதியதுடன், அதன் காலின் ஒரு பகுதி இயந்திரத்தில் சிக்கியதன் காரணமாகவே ரயில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கவுடுல்ல வனப்பகுதியிலிருந்து சோமாவதிய வனப்பகுதிக்கு தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் இயந்திரங்கள் மூலமான கரைவலை தொழிலை தடுக்க கோரிக்கை..!

  • Feb 17, 2026 - 11:54 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும், கரைவலைத் தொழிலில் இயந்திர பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க கோரி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் கடற்தொழில் அமைச்சரிடம் நேரில் கோரியுள்ளனர். கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சில் நேற்றைய தினம்(16.02.2026) திங்கட்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவை சந்தித்த போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பின் போது,பாரம்பரிய கரைவலை மீன்பிடித் தொழிலில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் […]

புதியவை செய்திகள் முக்கிய செய்திகள்

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்..!

  • Feb 17, 2026 - 11:31 AM
  • 0 Comments

கடந்த காலங்களில் பாதாள உலகக் குழுக்களையும் வன்முறையாளர்களையும் வளர்த்துவிட்டவர்களே இன்று அரசின் மீது சேறு பூச முற்படுகின்றனர் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:- நாட்டைப் பாதாள உலகக் கூடாரமாக மாற்றியவர்கள் யார் என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். வெள்ளை வான் கலாசாரத்தையும், பகிரங்கப் படுகொலைகளையும் சட்டபூர்வமாக்கிய ஒரு […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்த பிரித்தானிய துணை பிரதமர்..!

  • Feb 17, 2026 - 11:26 AM
  • 0 Comments

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (17.02.2026) காலை நாட்டை வந்தடைந்தார். டேவிட் லாமியுடன் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 7 உயர்மட்ட அதிகாரிகள் தூதுக்குழுவினராக வருகை தந்துள்ளனர். தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-664 என்ற விமானம் மூலம், இன்று (17.02.2026) காலை 09:11 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்பதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்..!

  • Feb 17, 2026 - 11:17 AM
  • 0 Comments

அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ‘குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ மற்றும் ‘வாடகையை இரத்துச் செய்யும் சட்டமூலம்’ ஆகியவை தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகச் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (17.02.2026) பாராளுமன்றத்தில் அறிவித்தார். நீதி அமைச்சின் செயலாளரால் கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்தச் சட்டமூலங்கள் தற்போதைய வடிவில் முன்னோக்கி கொண்டு செல்லப்படமாட்டாது எனச் சபாநாயகர் இதன்போது […]

ஈழம் உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் – காரைதீவு அமர்வில் கடும் எதிர்ப்பு..!

  • Feb 17, 2026 - 10:14 AM
  • 0 Comments

அரசாங்கம் முன்வைக்க முயற்சிக்கும் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயக அடிப்படைகளையே பாதிக்கும் அபாயம் கொண்டது என காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு. பாஸ்கரன் கடுமையாக எச்சரித்தார். காரைதீவு பிரதேச சபையின் எட்டாவது அமர்வு நேற்றையதினம் (16.02.2026) திங்கட்கிழமை கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் எந்த சட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். புதிய சட்டம் நாட்டில் ஜனநாயக உரிமைகள் குறையும் சூழலை உருவாக்கக்கூடும் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுன் ஒருவர் கைது..!

  • Feb 17, 2026 - 10:11 AM
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இன்று (17.02.2026) அதிகாலை இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் 58 வயதான கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பில் போதைப்பொருளுடன் இருவர் கைது..!

  • Feb 17, 2026 - 10:09 AM
  • 0 Comments

கொழும்பு, வெல்லம்பிட்டி மற்றும் மட்டக்குளிப் பகுதிகளில் நேற்றைய தினம் (16.02.2026) மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்புகளில் பெருமளவு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வெல்லம்பிட்டி, கொட்டுவில பகுதியில் 50 கிராம் 960 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர முகாமின் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் (STF) கிடைத்த தகவலின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையில் தகைமைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே இடம்..!

  • Feb 17, 2026 - 10:06 AM
  • 0 Comments

இனிவரும் காலங்களில் இலங்கை போக்குவரத்து சபையின் பதவிகளுக்கு ஊழியர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள், தகைமைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். அனைத்து பதவிகளுக்குமான ஊழியர் உள்வாங்கல் செயன்முறையை முறைப்படியாக மேற்கொள்வதே இதன் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் சில நாட்களில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய அலுவலகங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சவூதி அரேபியா மன்னரால் இலங்கைக்கு அன்பளிப்பாக 50 டன் பேரீச்சம்பழங்கள்..!

  • Feb 17, 2026 - 09:49 AM
  • 0 Comments

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர், காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள், இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மானிடம் இருந்து 50 டன் பேரீச்சம்பழங்களை, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் (KSrelief) ஊடாக இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிவைத்தார். இந்நிகழ்வின் போது இலங்கை மத மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான துணை அமைச்சர் கௌரவ முனீர் முலவ்பர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக இப் பேரீச்சம்பழங்கள் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp