புதியவை செய்திகள் முக்கிய செய்திகள்

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்..!

e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0aeb5e0aebee0aeb3e0aebfe0ae95e0aeb3e0af8d e0ae8ee0aeb5e0aeb0e0aebee0ae95 e0ae87e0aeb0e0af81e0aea8e0af8d | Pathivu News

கடந்த காலங்களில் பாதாள உலகக் குழுக்களையும் வன்முறையாளர்களையும் வளர்த்துவிட்டவர்களே இன்று அரசின் மீது சேறு பூச முற்படுகின்றனர் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-

நாட்டைப் பாதாள உலகக் கூடாரமாக மாற்றியவர்கள் யார் என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். வெள்ளை வான் கலாசாரத்தையும், பகிரங்கப் படுகொலைகளையும் சட்டபூர்வமாக்கிய ஒரு அரசியல் குழுவின் பிரதிநிதியாக இருந்துகொண்டு, சாகர காரியவசம் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையானது.

தற்போதைய அரசு பொலிஸ் திணைக்களத்துக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அதனாலேயே, கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கினால் மறைக்கப்பட்ட பல குற்றச் செயல்கள் இன்று வெளிச்சத்துக்கு வருவதுடன், குற்றவாளிகள் தராதரம் பாராது கைது செய்யப்படுகின்றனர்.

இந்தச் சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் திசைதிருப்பவே தேசிய மக்கள் சக்தி அரசு பாதாள உலகத்துடன் இணைந்துள்ளது என்ற அப்பட்டமான பொய்யை மொட்டுக் கட்சியினர் பரப்புகின்றனர்.

சட்டத்தரணியும் அவரின் மனைவியும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியில் நீதியைத் தடுத்ததைப் போலன்றி, எமது ஆட்சியில் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

தேர்தல் களத்தில் மக்கள் தங்களை முற்றாக நிராகரித்துவிட்டனர் என்பதை உணர்ந்துள்ள மொட்டுக் கட்சி, இவ்வாறான அச்சமூட்டும் கதைகள் மூலம் மீண்டும் அரசியல் உயிர் பெற முயற்சிக்கின்றது.

பிரதமரின் கருத்துக்களைத் திரிபுபடுத்தி இராணுவத்தினரைத் தூண்டிவிடும் இவர்களின் இழிவான அரசியல் இனிமேலும் எடுபடாது. – என்றார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp