உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் இயந்திரங்கள் மூலமான கரைவலை தொழிலை தடுக்க கோரிக்கை..!

e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0ae87e0aeafe0aea8e0af8de0aea4e0aebfe0aeb0e0ae99e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaee0af82e0aeb2e0aeae | Pathivu News

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும், கரைவலைத் தொழிலில் இயந்திர பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க கோரி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் கடற்தொழில் அமைச்சரிடம் நேரில் கோரியுள்ளனர்.

கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சில் நேற்றைய தினம்(16.02.2026) திங்கட்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவை சந்தித்த போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த சந்திப்பின் போது,பாரம்பரிய கரைவலை மீன்பிடித் தொழிலில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் கடல் வளங்கள் அழிவடைவதும், சிறு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதும் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பாரம்பரிய மீன்பிடித் தொழிலையும், எமது மீனவ சமூகத்தின் உரிமைகளையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. எனவே கரைவலைத் தொழிலில் இயந்திர பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் ஆலோசனைகள் பெறப்படும்.

Pathivu News

Pathivu News

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எமது கடல் வளங்களை பாதுகாத்து, எதிர்கால தலைமுறைகளுக்கான நிலைத்த கடற்றொழிலை உறுதி செய்வதே எமது நோக்கம் என கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின் போது, அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளரும் உடனிருந்தனர்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp