செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுன் ஒருவர் கைது..!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இன்று (17.02.2026) அதிகாலை இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் 58 வயதான கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அலகினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்