உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மக்களுக்கு எரிபொருளுக்கு QR முறை..!

  • Mar 5, 2026 - 11:01 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தின் போது QR முறைமையை பின்பற்றுமாறு, வட மாகாண அதிபர் சங்கம், மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வட மாகாண அதிபர் சங்கத்தினர், மாவட்ட அரசாங்க அதிபரரை, அவரின் அலுவலகத்தில் சந்தித்து இதற்கான கோரிக்கை கடிதத்தினை கையளித்துள்ளனர். எரிபொருள் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள், நீண்ட வரிசைகள் மற்றும் ஒழுங்கின்மை ஆகியவை பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் பெறுவதற்கு மூன்று அல்லது நான்கு […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வலி. கிழக்கு தவிசாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அநாகரிகமான நடந்து கொண்ட இளைஞன் விளக்கமறியலில்..!

  • Mar 5, 2026 - 10:39 AM
  • 0 Comments

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாக பேசி , அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் . மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வலி.கிழக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட கட்டைப்பிராய் பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் ஒன்றினை இடித்து அகற்ற நீதிமன்று கட்டளையிட்டிருந்த நிலையில் , கட்டடத்தை இடித்து அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது. அதனை பிரதேச சபை தவிசாளர் , செயலாளர் , பொலிஸார் , […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கச்சத்தீவுக்கு எதிர்பாராத பக்தர்களின் வருகை – அடுத்த வருட திருவிழா குறைகள் இன்றி சிறப்பாக நடாத்த ஏற்பாடு..!

  • Mar 5, 2026 - 10:38 AM
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த வருடம் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும், அடுத்த வருடம் தீர்க்கப்பட்டு சிறப்பான முறையில் அனைத்து வசதிகளோடும் திருவிழா நடைபெறும் என யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்கு பின்னரான நிலமைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் பின்னர் கருத்து […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலஞ்சம். வாங்கிய இருவர் கைது..!

  • Mar 5, 2026 - 10:07 AM
  • 0 Comments

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுத்தர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது. சுகாதார அமைச்சின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனமொன்றிடமிருந்து சுகாதார அமைச்சுக்குக் கட்டடமொன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டதன் பின்னர், அதற்கான வாடகைப் பணத்தைக் காசோலைகள் மூலம் செலுத்துவதில் எவ்வித தாமதமும் இன்றிச் செயற்படுவதற்காகவே சந்தேகநபர் […]

உலகம் புதியவை முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கு அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடிய வெளிவிவகார அமைச்சர்..!

  • Mar 5, 2026 - 09:46 AM
  • 0 Comments

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி கட்டார், லெபனான், ஜோர்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, அப்பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் அந்தந்த நாடுகள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அதற்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். மேலும், அந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார். […]

உலகம் புதியவை முக்கிய செய்திகள்

சைப்பிரஸ் மீதான ட்ரோன் தாக்குதல்: ஈரானில் இருந்து ஏவப்படவில்லை..!

  • Mar 5, 2026 - 09:44 AM
  • 0 Comments

சைப்பிரஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய இராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்திய ஆளில்லா விமானம், ஈரானில் இருந்து ஏவப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி,, சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. இருப்பினும், குறித்த ட்ரோன் யாரால் ஏவப்பட்டது என்பது குறித்த தகவல்களை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு இதுவரை வெளியிடவில்லை. கடந்த 2ஆம் திகதி, “ஷாஹெட்” வகையைச் சேர்ந்த ஆளில்லா விமானம் ஒன்று, அக்ரோட்டிரி பகுதியில் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 5, 2026 - 09:42 AM
  • 0 Comments

ஊவா மற்றும் சப்ரகமுவ உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகல் மழை. ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மன்னார் […]

உலகம் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்திட்டம்..!

  • Mar 4, 2026 - 12:58 PM
  • 0 Comments

கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு நேற்று (03.03.2026) பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதேச செயலாளர் திருமதி ஜெ. திருச்செல்வம் தலைமையில், பிரதேச செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் க.புவினராஜ் ஏற்பாட்டில் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில்“விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் – […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஓட்டமாவடி பிரதேச செயலகம் நடாத்திய இப்தார் நிகழ்வு..!

  • Mar 4, 2026 - 12:54 PM
  • 0 Comments

ஓட்டமாவடி பிரதேச செயலகம் வருடாந்தம் நடாத்தும் “இப்தார்” நிகழ்வு பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் தலைமையில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் ரிவர் பாக்கில் நேற்று(03.03.2026) மாலை இடம் பெற்றது. இப்தார் நிகழ்வில் நோன்பின் முக்கியத்துவம் தொடர்பாக பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது தெளிபுபடுத்தினார். இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஹலால்தீன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.பாறூக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், […]

புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவணி..!

  • Mar 4, 2026 - 12:42 PM
  • 0 Comments

மட்டக்களப்பில் உலக உடல் பருமன் தினத்தினை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் காந்தி பூங்காவில் இருந்து தனியார் பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு நடைபவணி இன்று (04.03.2026) இடம் பெற்றது. ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 4 திகதி உடல் பருமன் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும், உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற ஆபத்துக்களைத் தடுக்கவும், முறையான உணவு மற்றும் உடற்பயிற்சியின் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp