உலகம் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்திட்டம்..!

e0ae95e0af8be0aeb1e0aeb3e0af88e0aeaae0af8de0aeaae0aeb1e0af8de0aeb1e0af81 e0aeaae0aebfe0aeb0e0aea4e0af87e0ae9a e0ae9ae0af86e0aeafe0aeb2 | Pathivu News

கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு நேற்று (03.03.2026) பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதேச செயலாளர் திருமதி ஜெ. திருச்செல்வம் தலைமையில், பிரதேச செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் க.புவினராஜ் ஏற்பாட்டில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில்“விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் – அகன்று செல்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மார்ச் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல் திட்டத்துடன்” இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழங்கப்பட்டன. போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் பேருந்துகள் மற்றும் முற்சக்கர வண்டி என பல வாகனங்களில் ஒட்டப்பட்டன.

எமது நாட்டின் மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை 1818 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp