உலகம் புதியவை முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கு அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடிய வெளிவிவகார அமைச்சர்..!

e0aeaee0aea4e0af8de0aea4e0aebfe0aeaf e0ae95e0aebfe0aeb4e0ae95e0af8de0ae95e0af81 e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aeb0e0af8de0ae95 | Pathivu News

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி கட்டார், லெபனான், ஜோர்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, அப்பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் அந்தந்த நாடுகள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அதற்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.

மேலும், அந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார். அந்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

அவசர காலங்களில் கோரப்படும் மனிதாபிமான உதவிகளை வழங்க இலங்கை தயக்கமின்றி முன்வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மனிதாபிமான அணுகுமுறைக்காக மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அமைச்சர் விஜித ஹேரத்திற்குத் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். அத்துடன், அங்கிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் அவர்கள் மேலும் உறுதியளித்தனர்.v

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp