உலகம் புதியவை முக்கிய செய்திகள்

சைப்பிரஸ் மீதான ட்ரோன் தாக்குதல்: ஈரானில் இருந்து ஏவப்படவில்லை..!

e0ae9ae0af88e0aeaae0af8de0aeaae0aebfe0aeb0e0aeb8e0af8d e0aeaee0af80e0aea4e0aebee0aea9 e0ae9fe0af8de0aeb0e0af8be0aea9e0af8d e0aea4 | Pathivu News

சைப்பிரஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய இராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்திய ஆளில்லா விமானம், ஈரானில் இருந்து ஏவப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி,, சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

இருப்பினும், குறித்த ட்ரோன் யாரால் ஏவப்பட்டது என்பது குறித்த தகவல்களை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு இதுவரை வெளியிடவில்லை.

கடந்த 2ஆம் திகதி, “ஷாஹெட்” வகையைச் சேர்ந்த ஆளில்லா விமானம் ஒன்று, அக்ரோட்டிரி பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய இராணுவத் தளத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தினால் சொத்துக்களுக்குச் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சைப்பிரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்தப் போர்ச் சூழலில் சைப்பிரஸ் எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் பங்காளியாக இருக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்ரோட்டிரி தளத்தில் தங்கியுள்ள இராணுவத்தினரைப் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து படைத்தளத்தைப் பாதுகாப்பதற்காக ரோயல் கடற்படையின் வைல்ட்கேட் ஹெலிகாப்டர் வரும் நாட்களில் சைப்பிரஸிற்கு வருகை தரும் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp