உலகம் முக்கிய செய்திகள்

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

  • Feb 9, 2025 - 07:31 AM
  • 0 Comments

ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திககள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே 209 கி.மீ தொலைவில் கரீபியன் கடலில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ உள்ளிட்ட கரீபியன் கடலை அண்மித்த தீவுகள் மற்றும் நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையின்; வரவு – செலவுத் திட்டத்தை பூதகண்ணாடி வைத்து பார்க்கின்றது சர்வதேச நாணய நிதியம்

  • Feb 9, 2025 - 07:14 AM
  • 0 Comments

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட முக்கிய விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கிறதா என அவதானிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜுலி கொஸாக் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது ஊடக சந்திப்பு கடந்த வியாழக்கிழமை வொஷிங்டனில் நடைபெற்றது. இச்சந்திப்பில் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கான அடுத்தகட்ட நிதி எப்போது விடுவிக்கப்படும் எனவும், அரசாங்கத்தினால் எதிர்வரும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிலையில், […]

முக்கிய செய்திகள்

13 வது திருத்த அரசியலமைப்பான மாகாணசபைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டுமென கலாநிதி ஜெஹான் பெரேரா கோரிக்கை

  • Feb 9, 2025 - 07:03 AM
  • 0 Comments

அரசியலமைப்பு விடயத்தையும், பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வு விடயத்தினை சமநேரத்தில் முன்னெடுப்பதற்கான இயலுமை தற்போதைய அரசாங்கத்திடத்தில் காணப்படவில்லை. அரசாங்கம் அரசியலமைப்பு விடயத்தினை பொருளாதார விடயங்களை கையாண்டதன் பின்னர் கையாள்வதற்கு முனைகின்றது என்று கருதுகின்றேன். எனினும் அரசியலமைப்பு சம்பந்தமான விடயம் முக்கியமானது, வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் பிரதான எதிர்பார்ப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகும். ஆகவே பொருளாதார விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கம் சமகாலத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி அவற்றை வினைத்திறனாக செயற்படுத்துவதன் ஊடாக வடக்கு,கிழக்கு மக்களின் […]

முக்கிய செய்திகள்

அஸ்வெசும திட்டம் தொழில்நுட்ப அடிப்படையற்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

  • Feb 8, 2025 - 06:42 PM
  • 0 Comments

வறுமை நிலை தொடர்பில் எவ்வித புரிதலும் இன்றி அஸ்வெசும திட்டத்தின் வெற்றி குறித்து எவ்வாறு தீர்மானிக்க முடியும்? வறுமையை ஒழிப்பதற்கு முன்னர் காணப்பட்ட திட்டங்களை விட அஸ்வெசும சிறந்ததெனக் கூறுவதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ‘எதிர்காலத்துக்கான பட்ஜெட்’ என்ற தொனிப்பொருளில் நேற்று வெள்ளிக்கிழமை (07) கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதுள்ள வறுமை நிலை தொடர்பில் எவ்வித புரிதலும் […]

உலகம் செய்திகள்

ரஸ்சிய ஜனாதிபதி புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஸ்சிய பாடகர் மர்ம மரணம்

  • Feb 8, 2025 - 06:34 PM
  • 0 Comments

ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளுடன் தங்களின் அண்டை நாடான உக்ரைன் சேருவதை எதிர்த்து ரஸ்சியா அந்நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில் இரண்டு பக்கங்களிலும் உயிர்சேதங்களும், மக்கள் இடப்பெயர்வும் நிகழ்ந்துள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும், ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் மீது தொடுத்த போரை கண்டிக்கும் விதமாக அதிபர் புதினை விமர்சித்த ரஸ்சியா பாடகர் தனது […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

பூடான் நாட்டு காதலைப்பற்றி கேள்விப்பட்டால் நம்மவர்கள் அங்கே படையெடுப்பார்கள்

  • Feb 8, 2025 - 06:18 PM
  • 0 Comments

பூடான் நாட்டு காதலே வேற லெவலாக இருக்கும் பூடான் நாட்டு காதலை பொமினா (Bomena) என அழைப்பார்கள். இந்த முறைப்படி முதலில் பையன் ஒரு பெண்ணுக்கு ரூட்டு விட வேண்டும். அவளும் கொஞ்சம் வெட்கபட்டு, சிக்னல் கொடுத்தால் போதும். பையன் பொமினாவுக்கு தயாராகிவிடுவான். இரவில் பெண் தூங்கும் அறைக்குள் அவன் எப்படியோ சாமர்த்தியமாக நுழைய வேண்டும். பல சமயம் பெண்ணே வீட்டில் சொல்லி, அவளது அறைகதவை பூட்டாமல் இருப்பது, ஜன்னலை பூட்டாமல் வைத்திருப்பதும் எல்லாம் உண்டு. பெற்றோரும் […]

இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்

இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி படுதோல்வி

  • Feb 8, 2025 - 05:49 PM
  • 0 Comments

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற்றது. இதில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக […]

செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள் கட்டுமான பணி ஆரம்பம்

  • Feb 8, 2025 - 05:41 PM
  • 0 Comments

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் இப்பணிகள் ஆரம்பமானது. மிகத் தொன்மையான எமது முன்னோர்களின் வழிப்பாட்டுத் தலமான இவ்வாலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள்உருவாக்கம் செய்வதற்கு நீண்ட காலம் முயற்சி எடுக்கப்பட்டது. இந் நிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகள் பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தினை பழைய நிலைக்கு மீள் […]

முக்கிய செய்திகள்

தினமும் 4000ஆயிரம் கடவுச்சீட்டு வழங்கும் திட்டம் 10 நாட்களில் ஆரம்பம்

  • Feb 8, 2025 - 05:28 PM
  • 0 Comments

24 மணி நேரமும் இயங்கும், நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முன்மொழியப்பட்ட திட்டம், இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அந்த சேவையை செயல்படுத்த தேவையான பயிற்சி பெற்ற அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளின் பட்டியல், பொது சேவை ஆணைக்குழுவிற்கு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அதன்படி, குறித்த ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்தவுடன் 24 […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp