முக்கிய செய்திகள்

சிறுவர் துஸ்பிரயோக வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய புதிய வேலைத்திட்டம்- நீதியமைச்சர்

  • Feb 12, 2025 - 06:29 PM
  • 0 Comments

சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஸன நாணயக்கார தெரிவித்தார். துஸ்பிரயோகம் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 05 வருடங்கள் செல்வதாக அவர் குறிப்பிட்டார். காலம் தாழ்த்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சாட்சி வழங்கப்படும் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களினால் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுமெனவும் அவ்வாறு இடம்பெறும் போது குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் நீதியமைச்சர் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் அரசியலும் பொருளாதாரமும் ஸ்திரத்தன்மை அடைந்தள்ளதாக குவைத்திற்கு ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்

  • Feb 12, 2025 - 06:05 PM
  • 0 Comments

2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் குவைத் பிரதமர் ஸேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (11-02-2025) பிற்பகல் இடம்பெற்றது. தற்போது இலங்கையின் அரசியல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறைக்கான சாத்தியங்கள் விரிவடைந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்துவது மற்றும் […]

முக்கிய செய்திகள்

அர்ச்சுனா எம்பியின் பதில் தாக்குதலில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி!

  • Feb 12, 2025 - 05:45 PM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தன் மீது தாக்குதல் நடாத்தினார் என கூறி நபர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ். நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற வேளை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் வலிந்து வாக்குவாதப்பட்டதுடன் அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்தியுள்ளார் இதில் தற்பாதுகாப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில் தாக்குதல் தாக்கியதில் காயமடைந்தவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரியவருகின்றது […]

முக்கிய செய்திகள்

யாழ் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கெதிரான போராட்டம் இன்றும் தொடர்கின்றது

  • Feb 12, 2025 - 05:24 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் புதன்கிழமை (12) தொடர்கிறது. காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ‘பௌத்தம் உன் மதம் வழிபடு தையிட்டி என் மண் வழிவிடு’, ‘சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று’, ‘கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்து’ போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு […]

முக்கிய செய்திகள்

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

  • Feb 12, 2025 - 04:46 PM
  • 0 Comments

இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈபிடிபி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில் இந்தியாவின் கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழகப் பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்திகள்

சீனாவின் சரக்கு கப்பல் ரஸ்சியாவில் கரை ஒதுங்கியுள்ளது

  • Feb 12, 2025 - 07:17 AM
  • 0 Comments

ரஸ்சியாவின் சகலின் நெவெல்ஸ்கி கடற்கரை அருகே சீன சரக்கு கப்பல் கரை ஒதுங்கியது. அந்த கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறும் அபாயம் இருப்பதால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஸ்சியாவின் பால்டிக் கடற்பகுதியில் அன் யாங்-2 என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. சீனாவுக்குச் சொந்தமான அந்த கப்பலில் சுமார் 1 லட்சம் டொன் எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்றவை கொண்டு செல்லப்பட்டன. சகலின் நெவெல்ஸ்கி நகரில் உள்ள உஸ்ட்-லுகா துறைமுகம் அருகே சென்றபோது அந்த […]

இந்தியா செய்திகள்

மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் 45 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியதாக உ.பி. அரசு தகவல்

  • Feb 12, 2025 - 07:06 AM
  • 0 Comments

மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு 26-ந்தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது. மகா கும்பமேளாவை முன்னிட்டு திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். மகா கும்பமேளா தொடங்கியபோது சுமார் 40 கோடி மக்கள் புனித நீராட பிரயாக்ராஜ் வருகை தருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கும்பமேளா முடிவடைய […]

முக்கிய செய்திகள்

பௌத்த அக்தபத்திர மகோற்சவத்திற்கு இலங்கை முழு அணுசரனை வழங்குவதாக ஜனாதிபதியின் செயலாளர் உறுதியளித்துள்ளா

  • Feb 12, 2025 - 06:50 AM
  • 0 Comments

அமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவிக்கான அக்தபத்திரம் வழங்கும் மகோற்சவத்தை அரச அனுசரணையுடன் நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இலங்கை அமரபுர மகா பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவி தொடர்பான அக்தபத்திர மகோற்சவத்தை மார்ச் 10 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை அக்தபத்திர மகோற்சவத்திற்கு அரசாங்கத்தினால் வழங்கக் கூடிய அனைத்து ஆதரவையும் […]

உலகம் செய்திகள்

சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் டிரம்ப் இன் நடவடிக்கைகளுக்கு போப் ஆண்டவர் கண்டனம் தெரிவித்துள்ளார்

  • Feb 12, 2025 - 06:40 AM
  • 0 Comments

மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் புலம்பெயர்ந்து அமெரிக்காவிற்குள் செல்கின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அமெரிக்க அரசு அனுப்பி வருகிறது. இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp