இந்தியா செய்திகள்

மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் 45 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியதாக உ.பி. அரசு தகவல்

e0aeaee0ae95e0aebe e0ae95e0af81e0aeaee0af8de0aeaae0aeaee0af87e0aeb3e0aebe e0aea4e0aebfe0aeb0e0aebfe0aeb5e0af87e0aea3e0aebf e0ae9a | Pathivu News

மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு 26-ந்தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது.

மகா கும்பமேளாவை முன்னிட்டு திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். மகா கும்பமேளா தொடங்கியபோது சுமார் 40 கோடி மக்கள் புனித நீராட பிரயாக்ராஜ் வருகை தருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கும்பமேளா முடிவடைய இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை 45 கோடி பக்தர்களுக்கு மேல் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

மகர் சங்கிராந்தி, மவுனி அமாவாசை, பசந்த் பஞ்சமி நாட்களில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர் வருகை தந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையான இன்று காலை 10 மணி வரை 74.96 லட்சம் மக்கள் புனித நீராடியுள்ளனர். மவுனி அமாவாசை தினத்தன்று 8 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
மகர் சங்கிராந்தி நாளில் 3.35 கோடி பக்தர்களும், பசந்த் பஞ்சமி நாளில் 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடியுள்ளனர்.

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஸா உள்ளிட்டோர் புனித நீராடியுள்ளனர்.
வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமானோர் பிரயாக்ராஜியில் புனித நீராடியுள்ளனர்.

அதேபோல் பாலிவுட் பிரபலங்கள் பலரும் புனித நீராடியுள்ளனர்.

மவுனி அமாவாசை முன்னிட்டு கடந்த மாதம் 29-ந்தேதி அதிகாலையில் ஏராளமான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர். 60 பேர் காயம் அடைந்தனர். ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம்.
இதை உத்தர பிரதேச அரசு மறைக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp